“இன்னும் இருக்கும் நாட்களை சரிவரப் பயன்படுத்துவோம்” - விசாரணையின் பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!


ஊடகப்பிரிவு -
“இன்னும் இருக்கும் நாட்களை சரிவரப் பயன்படுத்துவோம். நேரத்தையும் காலத்தையும் இனியும் நாம் வீணடிக்க முடியாது” இவ்வாறு மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியா, ஈரற் பெரியகுளத்தில், இன்று (27) இடம்பெற்ற ஐந்து மணிநேர விசாரணை முடிவடைந்த பின்னர், வவுனியாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“அரசியல் ரீதியில் எம்மை வீழ்த்துவதே பொது எதிரியின் நோக்கம். நமது கடமைகளை சரிவரச் செய்வதில் கவனம் செலுத்துவோம். தூரநோக்குடனும் பொதுநல சிந்தனையுடனும் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவோம். இறைவனின் உதவியால் நாம் வெற்றி பெறுவோம்.
சமூகத்துக்காக மட்டுமின்றி, நாட்டின் நலன், இனங்களுக்கிடையிலான நல்லுறவு ஆகியவற்றை முன்னிறுத்தி பாடுபடுவோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -