எச்.எம்.எம்.பர்ஸான்-
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஓட்டமாவடி பிரதேசத்திற்கு வருகை தரவுள்ளார் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபைக்குப் பின்னாலுள்ள வளாகத்தில் சனிக்கிழமை (4) காலை 8.30 மணிக்கு வருகை தரும் சஜித் பிரேமதாச அங்கு ஏற்பாடு செய்துள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார் என்று தெரிவித்தார்.