ஏ.எல்.எம்.ஷினாஸ்-
றிசாத் பதியுதீன் எனும் தலைமைக் காக உயிரைக் கொடுப்பதற்கும் தயாராக இருக்கின்றோம் என திகாமடுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கே.எம்.அப்துல் றஸாக் (ஜவாத்) தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் ஐ.எல்.எம். மாஹிர் ஏற்பாடு செய்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் சம்மாந்துறை விழினையடி சந்தியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றும்போதே வேட்பாளர் ஜவாத் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து எங்கு உரையாற்றும்போது,
உங்களின் தலைமைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலம்தான் இந்த 2020 பாராளுமன்றத் தேர்தல் ஆகும். இது வரலாற்றை புதுப்பிக்கப் போகின்ற தேர்தலாக பார்க்க வேண்டியது அவசியமாகும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்காக நீங்களும் உங்கள் மனைவி பிள்ளைகளும் ஒன்றாகச் சேர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும். றிசாத் பதியுதீன் என்ற தலைவனை கைது செய்தால்தான் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்ற வங்குரோத்து நிலையை அரசாங்கம் அடைந்திருக்கின்றது.
றிசாத் பதியுதீன் எனும் தலைமையை நாம் இழக்க முடியாது. அவரை மீட்க வேண்டும். அவருக்காக உயிர்களை கொடுப்பதற்கு காத்திருக்கின்றோம். மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுக்கு எப்படி வீதிகளில் இறங்கி போராடினோமோ அப்படி வீதிகளில் இறங்கி போராடுவதற்கும் காத்திருக்கின்றோம். றிசாத் பதியுதீன் தலைமை இந்த நாட்டிற்கு என்ன செய்தது? நாட்டின் இறைமைக்கு அவர் என்ன செய்தார்? எதுவுமே செய்யவில்லை. முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காக முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பாராளுமன்றத்தில் தனது உயிரையும் துச்சமென கருதி குரல் கொடுத்திருக்கிறார்.
விலைக்கு வாங்க முடியாது தலைவராக ரிசாட்டை கருதுவதால் தான் இவரை சிறையில் அடைக்கப் பார்க்கிறார்கள். 52 நான் ஆட்சி மாற்றத்தின் போது கோடி கோடியாக பணத்தை தருகின்றோம். பதவிகளை தருகின்றோம். முஸ்லிம் சமூகத்தின் பொறுப்புகளைத் தருகின்றோம். வேலை வாய்ப்புகளை தருகிறோம் என்ற ஆசை வார்த்தைக்கு அடிபணியாத றிசாத் பதியுதீன் என்ற சக்தியை அல்லாஹ் தந்திருக்கின்றான். இந்த வரத்தை எங்களுக்கு கிடைத்த அருளை சிறையில் இட எத்தனிக்கின்றார்கள்.
இவர்களுக்கு பாடமாக றிசாத் பதியுதீன் இனும் எமது தலைவனை அதிக ஆசனங்களுடன் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்கள் இந்த உண்மையைப் புரிந்து கொண்டு சரியாக வாக்களித்தால் மூன்று முஸ்லிம் உறுப்பினர்களை பெறுவதற்கான நூறு வீத சாத்தியப்பாடு உண்டு. இது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் மாத்திரம்தான் உண்டு. மாறாக டெலிபோன் சின்னத்துக்கு அளிக்கப்படும் வாக்குகள் சிங்கள உறுப்பினர்களையே பாராளுமன்றம் செல்ல வைக்கும்.
இதனை புரிந்துகொண்டு சரியாக வாக்களித்து மூன்று முஸ்லிம் உறுப்பினர்களை மாவட்டத்தில் வென்றெடுப்பதற்கு மயில் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனை புரிந்துகொண்டு சரியாக வாக்களித்து மூன்று முஸ்லிம் உறுப்பினர்களை மாவட்டத்தில் வென்றெடுப்பதற்கு மயில் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.