திருகோணமலை,கிண்ணியா றகுமானியா நகரைச் சேர்ந்த அல்ஹாஜ் சஹீட் ஹனிபா என்பவருக்கு The Diocese of Asia In India வினால் சமாதான மற்றும் மனித உரிமைகளுக்கான கலாநிதி பட்டச் சான்றிதழ் அண்மையில் வழங்கி வைக்கப் பட்டுள்ளது.
இலங்கை சமாதான நீதவான்களின் பேரவையின் கிழக்கு மாகாண பணிப்பாளரும் ,திருகோணமலை மாவட்ட சர்வமத சகவாழ்வு பேரவையின் உறுப்பினரும் ,கடந்த 29 வருடங்களாக சமாதான, சகவாழ்வு மனித உரிமைகளுக்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருபவரும் "மகாத்மா காந்தி சமாதான விருது ", உலக சமாதான சிற்பி என போற்றப் படும் "நெல்சன் மண்டேலா சமாதான விருது மற்றும் Peace Ambassador of Sri lanka, Peace Excellency Award (USA) சமாதானத்திற்கான தேசபிமானி,தேச சக்தி, தேச கீர்த்தி ஆகிய விருதுகளை பெற்றவருமாவார்.
இவர் ஒய்வு பெற்ற முகாமை த்துவ சேவை உத்தியோகத்தரும் ,கல்முனை சஹிரா கல்லூரியின் பழைய மாணவராவார்.