இலங்கையில் உள்ள ரயில் நிலையங்களில் இலத்திரனியல் அட்டைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த இலத்திரனியல் அட்டைகளை பயன்படுத்துவதற்கான இயந்திரங்களை ரயில் நிலையங்களில் பொருத்துவதற்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான அனுமதியினை சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையிலுள்ள 353 ரயில் நிலையங்களில் இலத்திரனியல் அட்டைகளுக்கான இயந்திரங்களை அமைப்பதற்கு கடன் வசதிகளை வழங்கியுள்ளது.
தற்போது செயற்படும் ரயில் சேவைகளை தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தும் வகையில் குறித்த இலத்திரனியல் அட்டைகளுக்கான இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுவுள்ளன.
இதேவேளை இந்த புதிய தொழிநுட்ப திட்டத்தினூடாக நாளாந்தம் ரயில் நிலையங்களுக்குள் ஏற்படும் சன நெரிசலை கட்டுப்படுத்தி மக்களின் அன்றாட பயணங்களை இலகுபடுத்த முடியும் எனவும் ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.