பொதிகளுக்காக வாக்குப் போடும் கலாச்சாரத்தில் இருந்து விடுபடுவோம்; ரிஸ்லீ முஸ்தபா அழைப்பு!


மது பிராந்தியத்தில் கடந்த காலங்களில் அரசியல் செய்தவர்கள் எவரும் மக்களுக்கு எதுவுமே செய்யாமல் அவர்களுடைய தேவைகளை, அபிவிருத்திகளை மக்களுடைய காலடிக்கு கொண்டுவராமல் வெறுமனே காலங்களை கழித்துவிட்டு தற்போது ஒவ்வொரு வீடு வீடாக உலர் உணவு பொதிகளுடன் வருவதாக அறிய முடிகின்றது.
இவ்வாறு பொதிகள் வழங்கும் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் மயோன் முஸ்தபா ஜூனியர் றிஸ்லி முஸ்தபா தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருதில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் காரியாலய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்;
இவர்கள் வழங்கும் பொதிகளின் உச்சகட்ட பெறுமதி 3000 ரூபா தொடக்கம் 5000 ரூபா. எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு உங்களுக்கு சேவையாற்றுவதற்காக நீங்கள் வழங்குகின்ற ஆணை வெறும் ஐயாயிரம் ரூபா பெறுமதியான இந்த உலர் உணவுப் பொதிகளுக்கு உங்கள் வாக்குகளை வளங்கினால் உங்களுடைய வாக்கின் பெறுமதி என்ன என்பதைப் பற்றி நீங்கள் சற்று சிந்திக்க வேண்டும்.
5 வருடத்திற்கு ஐயாயிரம் ரூபாவை நாளொன்றுக்கு பிரித்தால் இரண்டு ரூபாய் 73 சதமே உங்களுடைய வாக்கின் பெறுமதியாகும்.
வீதியால் யாசகம் கேட்டு வருகிறவர்களுக்கும் இதனை வளங்க முடியாது. இப்படித்தான் உங்களுடைய வாக்குகள் சூரையாடப்படுகிறது என்பதை சிந்தித்து பார்த்தீர்களா? இதிலிருந்து விடுபட வேண்டாமா? அடிமைகளாக உங்களை வழிநடாத்தும் நிலைமையில் இருந்து மாற்றம் பெற வழிகளை தேடுங்கள்.
இளைஞர்களுக்கு யுவதிகளுக்கு ஏழைத் தாய்மார்களுக்கு வயோதிபர்களுக்கு எதிர்கால நம் சந்ததியினருக்கு சரியான பாதையை காட்டக் கூடிய அரசியல் தலைமைகளை தெரிவு செய்யுங்கள்.
என்னுடைய தந்தை காட்டிய வழியில் என்னுடைய எதிர்கால அரசியல் பயணத்தை முன்கொண்டு செல்ல திட்டம் தீட்டியுள்ளேன்.
எதிர்வரும் தேர்தலில் இந்த மாவட்டத்தில் நான் முதன்மையாக தெரிவு செய்யப்படுவதற்குரிய சந்தர்ப்பம் இருக்கிறது அது உங்கள் கரங்களிலே உள்ளது.
அரசாங்கக் கட்சியின் ஊடாக உங்களுடைய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து கொள்ளுங்கள் என வினயமாக கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -