புனானை பிரதேசத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தோர் கிறவல் அகழ்வு ..

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

ட்டக்களப்பு கிரான் வட்டார வனவள பகுதியான புனானை பிரதேசத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தோர் கிறவல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பிரதேச வனவள அதிகாரி எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.

தமது அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் மகாவலி பி வலய அதிகார சபையின் அனுமதி பத்திரத்தினை வைத்துத்துக் கொண்டு கிறவல் அகழ்வு பணி மற்றும் விற்பனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தார். நேற்று புதன் கிழமையன்று குறித்த கிறவல் அகழ்வு பணியினை தடுத்து நிறுத்தும் முகமாக வாழைச்சேனை பொலிசாரின் உதவியுடன் தமது வன அதிகாரிகள் அவ் இடத்திற்கு கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்ததாக கூறினார்.

இதன்போது கனரக வாகனங்கள் சில கிறவல் ஏற்றிக் கொண்டிருந்ததை அவதானித்து அவர்கள் தன் வசம் வைத்திருந்த ஆவணங்களை பரிசோதனை செய்திருந்தனர். இதன்போது குறித்த பிரதேசம் மகாவலி அதிகார சபைக்குட்பட்ட பிரதேசமாக கணித்து கிறவல் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக நிர்வாக சிக்கல் உள்ளதால் இதனை தீர்க்க நீதிமன்ற அனுமதியினை பெறும் நடவடிக்கை உள்ளதாகவும் அது வரை இப் பிரதேசத்தில் கிறவல் அகழ்வு பணியினை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு சம்பந்தப்பட்டோர்களை பணித்துள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் தமது நிர்வாக சிக்கல் தொடர்பாக நீதி மன்றம் ஊடாக தீர்வை பெற்றுக்கொள்ள வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -