ஒவ்வொரு வீட்டிலும் மலசலகூடம்” செயற்றிட்டத்தின் கீழ் மலசலகூடங்கள் கையளிப்பு.


எம்.என்.எம் .அப்ராஸ்-
லசலகூடங்கள் இன்றி அவதியுறும் குடும்பங்களுக்கான மலசலகூட தேவையை பூர்த்திசெய்யும் பொருட்டு கல்முனையன்ஸ் போரம் அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் “ஒவ்வொரு வீட்டிலும் மலசலகூடம்” செயற்றிட்டத்தின் கீழ் இணங்காணப்பட்ட குடும்பங்களுக்கான மலசலகூடங்கள் கையளிக்கப்பட்டுவருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் கல்முனை மாதவன் வீதி மற்றும் பள்ளிவாசல் ஒழுங்கை ஆகிய வீதிகளிலிருந்து இணங்காணப்பட்ட இரு குடும்பங்களுக்கான மலசலகூட கட்டுமானம் பூர்த்தியாக்கப்பட்டு பாவணைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு கல்முனையன்ஸ் போரமினால் முன்னெடுக்கப்பட்ட கல்முனைக்கான கல்வி, சமூக, பொருளாதார தனிநபர் தகவல் திரட்டின் மூலம் இணங்காணப்பட்ட குடும்பங்களே இச்செயற்றிட்டத்திற்கான பயனாளிகளாக தெரிவுசெய்யப்படுகின்றனர்.
கல்முனையில் உள்ள சகல குடும்பங்களுக்கும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொடுக்கும் கல்முனையன்ஸ் போரத்தின் இலக்கினை அடைந்துகொள்ளும் முகமாக இத்திட்டத்தின் மூலம் இதுவரை கல்முனை பிராந்தியத்தில் எட்டு மலசல கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -