எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் சம்மேளத்தினால் துறைசார்ந்த புத்தி ஜீவிகளுடனான விஷேட கலந்துரையாடல் நேற்று ஜூலை 09 ம் திகதி இரவு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் A.L M .உவைஸ் ஹாஜியாரின் தலைமையில்,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் உறுப்பினரான நவாஸ் முஸ்தபா தலைமையில் மருதானையில் அமைந்துள்ள உவைஸ் ஹாஜியார் அவர்களின்காரியாலயத்தில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணியும், பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய தலைவருமான அலி சப்ரி அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரித்த போது,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வந்தால் முஸ்லிம்களுக்கு பல அபாயம்கள் ஏற்படும் என்று பலர் கூறினார்கள் ஆனால் அவர் ஆட்சிக்கு வந்து இன்று 8 மாதம் முடிவடைந்தும் அவரால் எந்த அபாயமும் ஏற்படவில்லை. நலவுதான் நடந்திருக்கிறது.
அவர் நாட்டைக் காப்பாற்றுகின்றார், போதை ஒழிப்பு, வியாபாரம் மற்றும் கொவிட்-19 என்பனவற்றில் இருந்து நாட்டையும் நம் நாட்டு மக்களையும் காப்பாறினார். அதற்கு இன்னமும் தன் முயற்சிகளை செய்த வண்ணம் இருக்கின்றார் என தெரிவித்தார்.
அத்தோடு சமய சார்பு உள்ள கட்சிகளுக்கு இனி இங்கு இடமில்லை எனவும், நீங்கள் அரசியல் கட்சிகளோடு இணைந்து பயணியுங்கள்.
ஸ்ரீலங்கா பெரமுன கட்சி வெற்றி பெறுவது உறுதி எனவே இந்த பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஒத்துழைப்பை வழங்கி அதன் பலனை பெற்றுக் கொள்ளுங்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள் கேட்டுக் கொண்டார்.
இதனை தொடந்து இந் நிகழ்வில் உரையாட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர், முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார்,
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் 08 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
எனவே சிறுபான்மையினராக இருக்கும் நாம் இவர்களுக்கான ஒத்துழைப்பை வழங்கி பாராளுமன்றத்திற்கு இவர்களை அனுப்ப பாரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.