போட்டியிடாமல் ஒதுக்குமாறு ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு இரண்டில் இருந்தும் அதன் தலைவர்கள் என்னிடம் கோரினார்கள்.
ஆனால் களுத்துறை மாவட்ட முஸ்லிம் மக்களின் கோரிக்கைக்காகவே களமிறங்கியுள்ளேன் என களுத்துறை மாவட்ட சுயேட்சை குழு முதன்மை வேட்பாளர் புவாத் ஹாஜியார் தெரிவித்தார்.
பாணந்துறை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர்,
பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் வேட்பாளர் மர்ஜான் பளீலுக்கு தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக எழுத்துமூலம் உறுதியளிக்கப்பட்டாலோ ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களை புதைப்பதற்கு அனுமதிப்பதாகவும் இனவாத சக்திகளுக்கு இடமளிப்பதில்லை எனவும் உத்தரவாதம் வழங்கப்பட்டாலோ நான் போட்டியிடாமல் வாபஸ் பெற தயாராக இருக்கின்றேன்.
ஆனால் என்னை பொதுஜன பெரமுன ஏஜண்ட் என சஜித் தரப்பு விமர்சிக்கிறது, சஜித் தரப்பு ஏஜண்ட் என ஆளும் தரப்பு விமர்சிக்கிறது, நான் யாருடைய ஏஜண்டும் கிடையாது.
இப் பிரதேச மக்கள் கட்சி பேதமின்றி கூட்டாக விடுத்த கோரிக்கை காரணமாகவே நான் களமிறங்கினேன்.
முஸ்லிம் வாக்குகளை சிதைக்க நான் போட்டியிடவில்லை.
முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக மக்களின் வேண்டுகோளுக்கிணங்க போட்டியிட முன்வந்தேன் என்றார்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம். உங்கள் விளம்பரத்துக்கும் அழையுங்கள் 077 61 444 61 / 075 07 077 60 |