கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பகுதியில் அண்மைக்காலமாக பலர் டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக குறித்த பகுதியில் அதிகரித்துள்ள டெங்குப் பெருக்கத்தை கட்டுப்படுத்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சிரமதானம், புகை விசிறல், இரசாயன திரவம் தெளித்தல் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.