கன்னி உரையில் நினைவு கூறப்பட்டார் மர்ஹூம் ஏ.ஆர்.எம் ஜிப்ரி




ஜெம்சித் (ஏ) றகுமான்
மருதமுனை-

ல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு இன்று திங்கட்கிழமை (27) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இன்றைய அமர்வில் கல்முனை மாநகரசபை பட்டியல் சுழற்சி முறை உறுப்பினராக பதவியை ஏற்றிருந்த வி.எம்.சிபான் கன்னி உரையாற்றினார்.தனது அறிமுகத்தினை மேற்கொண்ட மாநகரசபை உறுப்பினர் சிபான் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்து 2018 ஆம் ஆண்டு நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மருதமுனை ஐந்தாம் வட்டாரத்தில் போட்டியிட்டு 583 வாக்குகளை பெற்றிருந்தேன்.கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் கல்முனை ஒற்றை அங்கத்தவர் தொகுதியில் அதிகூடிய வாக்குகளைப் பதிவு செய்திருந்தேன்.இருந்த போதிலும் துரதிஷ்டவசமாக அன்று இந்த உயரிய சபைக்கு தெரிவு செய்யப்படவில்லை.சுழற்சி முறையில் வழங்கப்படும் மேலதிக பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு வழி விட்டிருந்தேன்.தற்போது இப்பதவி நிலையை எனக்கு விட்டு தந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கௌரவ முன்னாள் உறுப்பினர் அல்ஹாஜ் நைனா முஹம்மத் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக என்னோடு தோளோடு தோள் நின்று உழைத்து நான் அழைத்த போதெல்லாம் அனைத்து கூட்டங்களிற்கும் ஓடோடி வந்து பேசி என்னை ஊக்கப்படுத்திய குரலரசன் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களை இந்த இடத்தில் நினைவு கூர்ந்து துஆச் செய்கின்றேன்.

எதிர்காலத்தில் இந்த சபையில் ஒற்றுமையோடும் உறுப்பினர்களாகிய உங்களோடும் சேர்ந்து பயணிக்க திடசங்கற்பம் பூண்டுள்ளேன். மாநகர சபையானது உள்ளுராட்சி அதிகார சபையின் மிகப்பெரிய அலகு ஆகும். இதன் வளர்ச்சியிலும் வினைத்திறனான செயல்பாட்டிலும் எமது பிராந்தியத்தின் வளர்ச்சி தங்கியுள்ளது. ஆகவே நமது மேயரின் நல்ல விடயங்களுக்கு என்றும் ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக உள்ளேன்.

அத்தோடு இந்த அவையின் கௌரவ மேயர் அவர்கள், கௌரவ உறுப்பினர்கள் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் எனது அரசியல் பயணத்திற்கு எதிர்காலத்திலும் பூரண ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என திடமாக நம்புகின்றேன்.
இன்றைய நாளில் எமது கட்சியினுடைய தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுகள் புனையப்பட்டு தேர்தல் ஆணையாளரின் கட்டளையையும் மீறி அவரிடம் வன்னியிலே வைத்து வாக்குமூலம் எடுக்கும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றது. கட்சி வேறுபாடுகள், இன வேறுபாடுகளுக்கு அப்பால் சிறுபான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியின் தலைமைத்துவம் என்ற அடிப்படையில் ஆட்சியில் உள்ள அரசாங்கங்களின் காட்டமான நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுக்கும் பணியில் இந்த சபையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு உறுப்பினர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றேன்.
மேலும் எனது இலட்சியமாக, கனவாகவும் இருந்த இந்த மாநகர சபை உறுப்பினர் என்ற பதவியை அடைந்து விட என்னோடு எந்த நேரத்திலும் ஒத்துழைத்த உடன்பிறவா சகோதரர்கள், உடன்பிறப்புக்கள், நண்பர்கள், உறவினர்கள், எந்த விதமான எதிர்பார்ப்புக்களும் இன்றி எனக்கு வாக்களித்த மருதமுனை ஐந்தாம் வட்டார வாக்காளப் பெருமக்கள் மருதமுனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்திய குழு தலைவர், உறுப்பினர்கள், கட்சியின் கௌரவ செயலாளர் சுவைத்தீன் ஹாஜியார் அவர்கள், கௌரவ தவிசாளர் அமீர் அலி அவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பதவியில் அமர்த்தி சத்தியபிரமாணம் செய்து அலங்கரித்த கௌரவ தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் கௌரவ மேயர் அவர்களிடம் ஒரு விண்ணப்பத்தை வைத்து விடைபெற நினைக்கின்றேன். எமது பிராந்தியத்திலுள்ள கல்விச் சமூகத்தின் தாகத்தை தணிக்கும் வண்ணம் கொரோனாவில் முடங்கிக் கிடக்கும் வாசிகசாலையில் உள்ள பத்திரிகை வழங்கும் பகுதியில் அன்றாடம் பத்திரிகைகளை வழங்கி வாசிகசாலைகளை வினைத்திறன் உள்ளதாகவும் ஆகவும் உயிரோட்டம் உள்ளதாகமாற்றவும் ஆவண செய்ய வேண்டுமென கேட்டு தனது உரையை நிறைவு செய்திருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -