ராஜாங்கனை தபால்மூல வாக்களிப்பு இன்று!

ஜே.எப்.காமிலா பேகம்-


ராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பிற்போடப்பட்ட தபால் மூல வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, பொலன்னறுவை இராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டது.

இந்த நிலையில், குறித்த பகுதியில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் தபால் மூல வாக்களிப்பு நடாத்தப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.

அத்துடன், அதற்கான மாற்று திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே, இராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தபால் மூல வாக்களிப்பை, இன்று நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :