நாட்டில் ஏற்பட்ட கொரோனா நெருக்கடியினால் மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் சுமார் நான்கு மாதங்களின் பின்னர் மீண்டும் இன்று(6) மாணவர்களுக்காக பகுதியளவில் திறக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தில் சகல பாடசாலைகளும் அரசாங்கம் கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலின்பிரகாரம் சுகாதார நடைமுறைகளைப்பேணி திறக்கப்பட்டன. மாகாண கல்வித்திணைக்களத்தின் கண்காணிப்புக்குழுக்களும் வலயமட்ட மேற்பார்வைக்குழுக்களும் இன்று பாடசாலைகளைத் தரிசித்தன.
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய தேசிய கல்லூரியும் சுகாதார விதிகளின்படி இன்று மாணவர்க்காக திறந்துவிடப்பட்டன.
ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வருகைதந்தனர்.பாடசாலையினுள் நுழைகின்றபோது அகச்சிவப்பு வெப்பமானி மூலம் உடல் வெப்பம்கணிப்பிடப்பட்டு பிரத்தியே வேசின்களில் கைகழுவி வகுப்புகளுக்குள் சென்றனர்.
அங்கு சமுகஇடைவெளியைப்பேணி மாணவர்களுக்கான இருக்கைகள் ஏலவே ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. அவற்றில் மாணவர்கள் அமர்ந்தனர்.முதலாம் பாடவேளையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பமாயின.இதுவரை எவ்வித சிக்கல்களுமின்றி பாடசாலைகள் ஆரம்பமாயுள்ளன.