இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கே பலம் பொறுந்திய அமைச்சு பதவி


தலவாக்கலை பி.கேதீஸ்-
நுவரெலியா மாவட்டத்தில் அதிக வாக்குகளை பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னமே வெற்றி பெறும் அதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கே பலம் பொருந்திய அமைச்சு பதவி கிடைக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்ன நுவரெலியா மாவட்ட வேட்பாளருமாகிய மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரச்சார கூட்டம் மஸ்கெலியா சாமிமலை பகுதியில் 2.7.2020 இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
மலையக மக்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீதும், எமது மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் மீதும் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாட்டை இத்தேர்தலில் வெளிப்படுத்துவார்கள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேர்தல் வெற்றிக்காக ஒருபோதும் குறுக்கு வழியை கையாண்டது கிடையாது. யதார்த்த பூர்வமாகவும் உண்மையாகவும் செயற்பட்டதை மக்கள் சரியாக புரிந்துகொண்டு இந்த தீர்ப்பை வழங்குவார்கள். மலையக மக்களுக்கு மன நிறைவான சேவையை வழங்கிய மாபெரும் ஸ்தாபனம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். எமது சமூக தலைவர் மறைந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற மாபெரும் அமைப்பை கட்டிக்காத்தவர். இதனை மலையக மக்கள் அரசியலுக்கு அப்பால் நின்று அவதானித்துள்ளனர். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக மக்கள் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும் கடந்த ஐக்கிய தேசிய அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அவர்களோடு சேர்ந்து செயற்பட்ட மலையக அமைச்சர்களும் நடந்து கொண்டவிதம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. பல அரச நிறுவனங்களில் மலையக மக்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டார்கள். மலையகத்தில் என்றுமில்லாத வகையில் சட்டவிரோத வியாபாரங்கள் தலைவிரித்தாடியது. தோட்டத் துறையிலும், அரச துறையிரும் ஒழுங்கு சீர்குழைந்திருந்தது. இவற்றுக்கெல்லாம் தீர்வை பெற்றுக்கொடுக்கும் ஆளுமை மிக்க துணிச்சல் மிக்க வீரத் தலைவன் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அந்த வழியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் மக்களுக்காக குரல் கொடுக்கும். இன்று அந்த மகத்தான தலைவனின் மறைவுக்கு பின்னர் மலையகத்தை சின்னா பின்னமாக உடைப்பதில் கண்ணும் கருத்துமாக சிலர் உள்ளனர். அவர்களின் பகல் கனவு பழிக்காது. மலையக சமூகத்தை உடைக்க முனைபவர்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலில் தகந்த பாடம் புகட்டும். எனவே நாம் வெற்றி பெறுவது உறுதி என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -