நௌஷாட்டின் வழியில் இன்று கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப், ஆயிரக்கணக்கான பெண்களைச் சந்தித்து தனது நிலைப்பாட்டை மக்களின் முன்வைத்தார்.
மீராசாஹிப் மகளிர் நலன்புரி அமைப்பின் மாபெரும் எழுச்சி மாநாடு இன்று (28/07/2020) அதன் போசகர் கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் தலைமையில் அவரது இல்லத்தில்
"நமது மாவட்டத்தை நாமே வென்றெடுக்க ஒன்றினைவோம்" எனும் தொணிபொருளில் இடம்பெற்றது.
இதில் 2000க்கு அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இங்கு விசேட உரையாற்றிய முன்னாள் முதல்வர் அவர்கள் எதிர் காலத்தில் இவ்வமைப்பினூடாக என்ன என்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தி செயற்படுத்தப் போகின்றேன் எனக் கூறியதோடு வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எமது அமைப்பு எடுக்க வேண்டும் எமக்கான எமது மாவட்டத்தை எந்தக் கட்சியை ஆதரிப்பதினூடாக வெற்றி கொள்ள முடியும் யாரை ஆதரிப்பதன் மூலம் எமது கல்முனை மாநகரத்தை பாதுகாக்க முடியும் என்பது தொடர்பான தெளிவான விளக்கத்தை வழங்கினார்.
நௌஷாட் சிராஸ் என புதிய கோஷத்துடன் பலர் முன்வரும் இந்த சந்தர்ப்பத்தில் தங்களது ஒரேயொரு மாவட்டமான அம்பாறையை வென்று விடுவார்களோ என்ற ஐயமும் இல்லாமலில்லை.இருக்கின்ற காலம் இன்னும் பல செய்திகளை சொல்லத்தான் போகிறது.
நிலவரம் -