அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பாரிய மரக்கிளை முறிந்து வீழ்ந்தமையினால் லொறியொன்று சேதமாகியுள்ளதுடன் சாரதி காயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
ரத்தல்ல குறுக்கு வீதியிலே (09) மதியம் 12.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா பகுதியில் பெய்த காற்றுடன் கூடிய மழையுடனான காலநிலையினால் பாரிய மரத்தின் கிளையொன்று முறிந்து லொறியின் மீது விழுந்துள்ளது. அட்டனிலிருந்து நுவரெலியா நோக்கிச்சென்ற சிறிய ரக லொறியின் மீதே மரக்கிளை வீழ்ந்தமையினால் வீதிப்போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலயம் தடைப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
முறிந்து வீழ்ந்த மரக்கிளையை நுவரெலியா இராணுவத்தினரும் நானுஓயா பொலிஸார் மற்றும் வீதி அபிவருத்தி அதிகாரசபை ஊழியர்களும் இணைந்து அப்புறப்படுத்திய பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் உங்கள் விளம்பர சேவைக்கு அழையுங்கள் 077 61 444 61 075 07 07 760 |