உங்கள் விசுவாசமுள்ள என்னால் இந்த மடலை எழுதவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளாகியதை இட்டு கவலையடைகிறேன்.
2000ம் ஆண்டு நீங்கள் கடற்தொழில் மற்றும் மீன்பிடி அமைச்சராக இருந்த போது இந்தியாவில் எனக்கு உங்களுடன் நட்பு உருவானது.இந்தியாவில் நடந்த South Asian for Human Rights மகாநாட்டில் பலஸ்தீன மக்களுக்கான உங்கள் போராட்டத்திற்கு விருது வழங்கப்பட்டது.அதே மகாநாட்டில் இளம் மனித உரிமை செயற்பாட்டுக்காக எனக்கு விருது கிடைத்தது.
அன்று முதல் உங்கள் தனிப்பட்ட அரசியல் செயற்பாடு,குறிப்பாக யுத்தத்தை முடித்தது,வடகிழக்கு பிரிப்பு.மாகாணசபைத் தேர்தல் மற்றும் பாரிய அபிவிருத்தி தொடர்பில் மிக நெருக்கமான அபிமானியானேன்.
2015ம் ஆண்டுவரை யுத்தக் குற்றம் மற்றும் மின்சாரக் கதிரை தொடர்பான சர்வதேச அழுத்தங்கள் இருந்தது.அந்தநேரத்தில் ஜெனீவா மனித உரிமைகள் தலமையம் வரை சென்று பல்வேறு வகையில் காத்திரமான உங்களது குழுக்களுடன் இணைந்து நாட்டையும் உங்களையும் பாதுகாக்க பல்வேறு கோணங்களில் செயலாற்றினேன்.
2010ல் ஆரம்பமான முஸ்லீம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் உங்கள் மீது முஸ்லீம் சமூகம் பாரிய ஏமாற்றத்தைக் கண்டது. இந்த நிலையில் இதில் ரணில் தரப்பின் சர்வதேச சதி அதிகமாக இருந்ததை ஆதாரபூர்வமாக எழுதினேன்.
2015 ரணில் அரசாங்கம் மீண்டும் 2002 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் உருவாகுவதற்கு , முஸ்லீம்களுக்கு எதிரான வங்குரோத்து அரசியலே காரணமானது.இருந்தும் ரணில் அரசு TNA கட்சியை தலையணையில்்வைத்து முஸ்லீம்களை அடிமைகளாக்க எடுத்த சதியை பகிரங்கமாக எதிர்த்தேன். அதனால் 2019 தேர்தலில் ரணில் ஆட்சி தூக்கிவீசப்பட வேண்டும் என பகிரங்கமாக செயற்பட்டேன். அதற்காக சூழல் மீண்டும் உங்களுக்குக் கிடைத்தது.
இதன் மூலம் முஸ்லீம்களுக்கும் உங்களுக்கும் இடையாலான கசப்புணர்வு மாற்றமடையலாம் என நினைத்தேன். இதற்கு நீங்கள் முழுமையான பங்களிப்பையும் செயற்பாடுகளையும் முன்னெடுப்பீரகள் என்றும் எதிர்பார்த்தேன்.
ஆனாலும் தற்போதைய பொதுத்தேர்தலில் உங்கள் சார்ந்த கட்சி:
1-ஜனாசாக்களை எரித்தமை
2-இராணுவத்தை நிர்வாக செயற்பாடுகளில் உள்வாங்கியமை
3-ஹகீம் மற்றும் றிசாத் ஆகிய முஸ்லீம் தலமைகள் மீதான அரசாங்க பயங்கரவாதம்
4-சிங்கள கடும்போக்கு இனவாதிகளை தேர்தல் களத்தில் அதிகமாக இறக்கியுள்ளமை
என்பவற்றுக்கு மேலாக கிழக்கில் முஸ்லீம் சமூகத்தை அடிமையாக்கி, அதற்கான சாசனத்தை எழுதுவதற்கு கபளிகரமாக செயற்படுகின்றீர்கள்.
1-கிழக்கு மாகாணத்திற்கு காலடிவைக்காத முஸ்லீம் பெயர்தாங்கிகளுக்கு தேசியப்பட்டியலில் இடம் வழங்கி உள்ளீர்கள்.1978ம் ஆண்டுமுதல் இரண்டு தேசியக் கட்சிகளும் முஸ்லீம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்திற்கு தேசியப் பட்டியல் வழங்கி கௌரவித்தது மரபாகும்.
2-கிழக்கு மாகாணத்தில் SLPP சார்பாக உள்ளூராட்சித்தேர்தலில் கூட வெற்றிபெறாதவர்களை வேட்பாளாராக நியமித்துள்ளீர்கள். SLFP ஒரளவு மனச்சாட்சியுடன் நடந்துள்ளது.கிழக்கில் உங்களுக்கு ஆதரவு தரும் நஜீப், பஷீர், ஹிஸ்புள்ளா,அத்தாவுள்ளா,முஸ்தபா போன்ற பலர் இருந்தும் திட்டமிட்டு ஓதுக்கப்பட்ட நோக்கம் என்ன?
3-கிழக்கில் அதிகமான SLPP சிங்கள ஆசனம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்பாறை மற்றும் திருகோணமலையில் சதியை அரங்கேறியது ஏன்?
4-அம்பாறையில் அத்தாவுள்ளா தனித்து போட்டியிட்டால் வெற்றிபெறலாம்..ஆனால் நீங்களோ SLPPகு 4 ஆசனத்தைப் பெற்று முஸ்லீம் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கான சூழ்ச்சியை வகுத்தீர்கள்.அம்பாறை முஸ்லீம்களின் அமைவிடம்.கல்முனை முஸ்லீம்களுக்கான தனித்துவம். இதனை அழிப்பதற்கு எடுத்துள்ள முயற்சி வரலாற்றுத் துரோகமாகும். இதற்காக முஸ்லீம் வாக்குகளை துண்டாட உச்சகட்ட போராட்டத்தில் உள்ளீர்கள்.
5-அம்பாறையில் கடந்த காலங்களில் ஓரிரு முஸ்லீம் பிரதிநிதிகளே தேசியக் கட்சியில் வெற்றி பெற்றனர்.UNP அரசாங்கம் தயாரத்ன என்ற கடும்போக்கு அமைச்சர் மூலம் அம்பாறையில் சிங்களமயமாக்களை விரிவாக்கியது.இதனால் தான் SLMC உதயமாகி,3 பிரதிநிதிகள் என்ற சரித்திரத்தை உருவாக்கி அம்பாறையை பாதுகாத்து வருகின்றது. இந்த தேர்தலிலும் SLMC & ACMC 4 ஆசனங்களைப் பெற்றால் வரலாறு மீண்டும் உயிர்பெறும்.
6-திருகோணமலை மாவட்டத்தில் 1960 ம் ஆண்டு முதல் வரலாறு கண்ட மர்ஹும் மஜீதின் அரசியலை புதைத்தீர்கள். SLPP இரண்டு ஆசனம் பெற்றால் நஜீப் மூலம் சிங்களப் பிரதிநிதி இல்லாது போகும் என்பதற்காக அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்தீர்கள்.இதற்காக 2 சிங்களப் பிரதிநிதிகளுக்காக விருப்பு வாக்கை சேகரிக்க 2 முஸ்லீம் முகவர்களை நியமித்தீர்கள்.இந்த வரலாற்றுத் துரோகம் மூலம் மாவட்ட ஒட்டுமொத்த எதிர்ப்பையும் பெற்றுள்ளீர்கள்.
7-திருகோணமலையில் அதாவுள்ளா கட்சியை தனியே போட்டியிட இறுதி நேரத்தில் எதற்காக மனமாற்றம் செய்தீர்கள்.இதன் மூலம் முஸ்லீம்களின் வாக்குகளை சிதறடித்து கடந்த காலத்தைப் போன்று மாற்று அணியில் 2 முஸ்லீம் பிரதிநிதி வருவதை தடுக்கலாம் எனக் கணக்கு போட்டீர்கள்.இறைவன் கணக்கு வேட்புமனுவை நிராகரித்தது.தேர்தல் முடிவும் இதைவிட கொடுமையாக இருக்கும்.
8-அதுமட்டுமல்ல SLMC & ACMC கட்சிக்கு எதிரானவர்களை கிழக்கில் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற போர்வையில் ,,முஸ்லீம் வாக்குகளை துண்டாடும் புரோக்கர்களாக நியமித்துள்ளீர்கள்.
9- உண்மையில் உங்களுக்கு SLMC & ACMC தலமை பிடிக்காது என்றால் அவர்களுக்கு எதிரானவர்களை உங்கள் கட்சியில் போட்டியிட வைத்து முஸ்லீம் சமூகத்திற்கு கௌரவம் மற்றும் புதிய தலமைத்துவத்தை வழங்கி இருக்கலாம் அல்லவா?
10-கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்கள்,சிங்களவர்களை இனப்படுகொலை செய்த சர்வதேச பயங்கரவாதி கருணாவை கட்டுக் கடங்காது விட்டுள்ளீர்கள்.சாதாரண சமையல் கத்தியை வைத்திருந்ததற்காக அப்பாவி முஸ்லீம்களை உங்கள் சட்டம் துன்புறுத்தியது நினைவு உள்ளதா?
ஆனால் தான் கொலையாளி, முஸ்லீம் தலமைகளை கொலை செய்வேன் என குற்ற ஒப்புதல் வழங்கும் கருணாவிற்கு இராஜமரியாதை வழங்குகின்றீர்கள்.
முஸ்லீமகளின் அரசியல் அதிகாரத்தை கிழக்கில் இல்லாது செய்வது.கருணா மூலம் அவர்களை அடிமைகளாக மாற்றுவது.அம்பாறையை சிங்களமயமாக்கி,அதனூடாக கிழக்கில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது. இதற்கான நிகழ்ச்சி நிரலை முஸ்லீம் பெயர் தாங்கிய துரோகிகள் மற்றும் தமிழ்,சிங்கள கும்பல்கள் ஒட்டுமொத்த அராஜகத்தை கிழக்கில் தேர்தல் மூலமாக அடைவதற்கு முயற்சிக்கின்றீர்கள்.
11-SLMC & ACMC கட்சிளை நான் ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை.அவர்கள் மீது பல விமரசனங்கள் உள்ளது. இருந்தும் முஸ்லீம்-சிங்கள உறவை கட்டியெழுப்ப கிழக்கில் ஆளுமை மற்றும் செல்வாக்குள்ள முஸ்லீம் தலமைகளை ஆளும்கடசியாக இருந்தால் தேர்தலில் சந்தர்ப்பம் வழங்கி இருக்கலாம்.மாறாக சமூகத்தில் அங்கீகாரமோ,அறிமுகமோ,ஆளுமையோ இல்லாதவர்களை துருப்புச் சீட்டாக போட்டியிட வைத்துள்ளீர்கள்.
12-முஸ்லீம்கள் இருப்பு மற்றும் பாதுகாப்பை மேலும் மேலும் அச்சுறுத்தலாக்கும் அரச இயந்திரம் சாதிக்க நினைப்பது என்ன?இதன் மூலம் ஆயுதம் ஏந்துவதற்கு உள்ளாக்கி ,பின்னர் நிரந்தர பயங்கரவாத முத்திரை குத்துவதற்காகவா காத்திருக்கின்றீர்கள்?
முஸ்லீம்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்தவர்கள். இந்த நாட்டின் ஒறுமைப்பாடு மற்றும் அபிவிருத்திக்காக அர்ப்பணம் செய்பவர்கள்.நீங்கள் ஆயிரம் முறை அழுத்தினாலும் வன்முறைக்கு போகமாட்டார்கள்.
இந்த சமூகத்தின் மீது எதுவித எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் மனச்சாட்சியுடன் செயற்படுகிறேன். நாட்டின் இறையான்மை,நல்லிணக்கம் மூலம் வரலாற்றுத் தவறுகளை திருத்த முடிவும்.மாறாக தொடர்ச்சியான திட்டமிட்ட அதிகார அரசியல் போட்டிக்காக தாய்நாட்டை சுடுகாடாக்க முடியாது .
இதனால் தேசிய அரசியலில் இதுவரை இருந்த எனது நம்பிக்கை தோல்விகண்டதாக உணர்கிறேன். ஆதலால் எனது சமூகத்தின் மீதான திறந்த வெளியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரசாங்க அராஜகத்தை ஆதரிப்பதற்கு மனச்சாட்சி இடம்வழங்கவில்லை.இதனால் இந்தத்தேர்தல் மூலமாக பலமான சிறுபான்மை முஸ்லீம் கட்சி அரசியலில் எனது பயணத்தை தொடர உள்ளேன்.
இப்படிக்கு
உங்கள் மீது மரியாதையுள்ள
FAHMY MBM -UK