சட்டவிரோத மண் கடத்தல்காரர்களுக்கு தண்டம்..

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்திற்கு சொந்தமான வாகனேரி ஒதுக்குக்காடு முள்ளிவட்டவான் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களும், இரண்டு உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.

வாகனேரி ஒதுக்குக்காடு முள்ளிவட்டவான் பகுதியில் வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினர் மற்றும் வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது மணல் அகழ்வில் ஈடுபட்ட நிலையில் இரண்டு சந்தேக நபர்களும், இரண்டு உழவு இயந்திரம்; சுற்றிவலைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் ஒருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பினையில் இரண்டு சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.

வாழைச்சேனை வட்டார வன பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு தனது தலைமையில் வட்டார வன உத்தியோகத்தர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -