இது பிரதேசம், கட்சி அரசியல், தொழில் மற்றும் முகஸ்துதி தாண்டிய பதிவு...


ஆதம்பாவா எஹியா கல்முனை
லர் பதவிகளால் தங்களையாவது அலங்கரித்துக் கொள்வோம் என்று முயற்சித்து அதிலும் தோல்வி காண்பவர்களாகவே இருக்கையில், ஒரு சிலர் மாத்திரமே பதவிகளை அலங்கரிக்கும் விதமாக செயற்படுகின்றார்கள்.
இதனை நாம் அன்றாடம் காணக்கூடியதாக இருக்கின்றது. பல வருடங்களாக சகல அதிகாரங்களும் இருந்தும் கோட்டைவிட்ட ஜாம்பவான்களாக வலம் வருகின்றவர்களாகவே அந்த பலரும் இற்றை வரை இருக்கின்றார்கள்.
ஆனால் அந்த பலரில் இருந்தும் மாறுபட்டவர்களாக வலம் வரும் அந்த ஒரு சிலரில் ஒருவராக சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய இராஜாங்க அமைச்சர் பைசால் காசிமை திடமாகச் சொல்லலாம்.
கடந்த அமைச்சரவையில் சுகாதார மற்றும் சுதேசிய பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டதிலிருந்து அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பினை அவர் மிகவும் சிறப்பாகச் செய்து வருவதனை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. ஏனெனில், நாடு பூராகவும் இருக்கின்ற வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார சேவை நிறுவனங்களே அதற்கு அத்தாட்சியாகும். இதனை அரசியல் மற்றும் தனிநபர் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களைத் தவிர அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.
வழங்கப்பட்ட அமைச்சு, பிரதி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு அதிகாரங்களை வைத்து பகட்டுக் காட்டிக்கொண்டு காலத்தைக் கழித்த இன்னும் கழிக்கின்ற நம்மவர்களைத்தான் தெரியுமே நமக்கு. உதாரணமாக, விளையாட்டு பிரதியமைச்சின் மூலமாக குறைந்த பட்சம் அம்பாறை மாவட்டத்தில் ஒரு முழுமைப்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானமாவது அமைக்கப்பட்டிருக்கிறதா என்றால், அப்படியொரு அதிகாரம் இருந்ததா என்று எதிர்க்கேள்வியே கேட்க வேண்டியுள்ளது.
அந்த அடிப்படையில், இராஜாங்க அமைச்சரின் செயற்திறனைப் பாராட்டும் விதமாக இன்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து, சுகாதார மற்றும் சுதேசிய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இவ்வாறு சொன்னார்.
“””பல அமைச்சர்கள் தத்தமது பிரதி அமைச்சர்களை எவ்வாறேனும் வெட்டிவிடவும் கழட்டிவிடவும் தான் பார்ப்பார்கள். ஆனால், நானோ இம்முறை அமைச்சரவைப் பட்டியல் தயாரிக்கப்பட்ட போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், எனக்கு பிரதி அமைச்சராக இருந்த பைசால் காசிமையே இராஜாங்க அமைச்சராக்கித் தாருங்கள் என்று கேட்டேன். காரணம் அவர் ஒரு செயல் வீரர். அவர் மேல் எனக்கு நம்பிக்கை இருந்தது.“””
இதனை அவர் பொய்யாக சொல்லியிருக்க வாய்ப்பில்லை. காரணம், குறைந்த பட்சம் கல்முனை சுகாதார பிராந்தியத்திலுள்ள பல வைத்தியசாலைகளுக்கும், சுகாதார சேவை நிலையங்களுக்கும் விஜயம் செய்தால் அவரால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைபெற்ற மற்றும் நடைபெற்று வருகின்ற அபிவிருத்தி செயற்பாடுகளைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கும்.
அவரின் அடுத்த இலக்காக இருக்கும், #கரையோரப்_பிரதேசத்துக்கான_சகல_வசதிகளையும்_கொண்ட_பொது_வைத்தியசாலையை_உருவாக்கி_பின்னர்_அதனை_மையப்படுத்தி_தென்கிழக்குப்_பல்கலைக்_கழகத்தில்_மருத்துவ_பீடத்தை_ஸ்தாபித்தல் என்ற உயரிய இலக்கை அவர் நிறைவேற்ற அல்லது அடுத்து வாய்ப்புக் கிடைக்கின்ற எவராவது நிறைவெற்ற வேண்டும் என்று அள்ளாஹ்வைப் பிரார்த்திப்போம்!
அதிகாரம் கிடைத்தும் வெறுமனே வெட்டிப் பேச்சும், வீர வசனமும் பேசிக்கொண்டும், கூடிக்கூடிக் கலைந்து அடிக்கற்களை தொலைத்துக் கொண்டும் இருக்கும் ஜாம்பவான்கள் மத்தியில் நமது சமூகத்துக்கு பாரிய சேவைகள் செய்த பைசல் காசிம் வெற்றி பெற பிறாத்தனை செய்யுங்கள் அவரின் வெற்றிக்காக ஒவ்வொரு வாக்கினையும் அவரின் இலக்கம் 7 க்கு வழங்கி அவரை மீண்டும் பாராளுமன்றம் அனுப்புவது நமது கடமையாகும்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -