ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன வேட்பாளர்களை ஆதரித்து றிசா பானு ஏற்பாடு செய்த பிரச்சாரக் கூட்டம்

அஸ்ரப் ஏ சமத்-

ட்டக்குழி சமுகசேவையாளரும் கொழும்பு லயன்ஸ கழக அங்கத்தவருமான றிசா பானு ஏற்பாட்டில் மட்டக்குழியில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன கூட்டமொன்று 12ஆம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்வின்போது கொழும்பு மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனியின் வேட்பாளா்களான தனசிறி அமரதுங்க, முன்னாள் அமைச்சா் சுசில் பிரேம் ஜயந்த ஆகியோா்கள் கலந்து கொண்டனா். இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணா் திலந்த, தெகிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பிணா் சரினா முஸ்தபா ஆகியோா்களும் உரையாற்றினாா்கள்.

கொழும்பு வடக்கு வாழ் மக்களது வீட்டுப் பிரச்சினைகள் அப்பிரதேசத்தில் உள்ள தோட்டங்களில் வாழும் மக்களது அடிப்படை பிரச்சினைகள் இளைஞா் யுவதிகளின் தொழில் பிரச்சினைகள் ,சுயதொழில் வசதிகளை செய்து தருமாறு அங்கு வருகை தந்த மக்களது பல கோரிக்கைகளை வேட்பாளா்களிடம் முன் வைத்தனா் .

இதற்கு பதிலளித்த தனசிரி அமரதுங்க எதிா்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பிணா் ஆனதும் இப்பிரதேச மக்களது சகல குறைபாடுகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ச ஆகியோா்களினது ஆலோசனையின் கீழ் அபிவிருத்திகளை செய்து தருவதாக தனசிறி உறுதியளித்தாா். 
 
கடந்த காலங்களில் கொழும்பு வடக்கு வாழ் மக்கள் காலத்துக்கு காலம் ஜ.தே.கட்சிக்கே வாக்களித்து வந்தீா்கள். ஆனால் வாக்குகளை பெற்ற ஜ.தேகட்சியினா் ஒரு போதும் உங்களது வாழ்க்கைத் தரத்தினை உயா்த்தவிள்ளை. மாறாக அவா்களும் அவா்களது குடும்பங்களுமே முன்னேறி உள்ளது. தோ்தல் காலத்திலும் மட்டும் உங்களிடம் வந்து வாக்கு கேட்பாா்கள் கொழும்பு வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் இலங்கை சுதந்திரமடைந்தில் இருந்து இன்று வரை ஜ.தே.கட்சிக்கே வாக்களித்து வருகின்றீா்கள். கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை கூட கடந்த 76 வருடங்களாக ஜ.தே.கட்சியே ஆட்சியமைத்து வருகின்றது. ஆனால் கொழும்பு வாழ் மக்கள் அன்று இருந்தவாரே இன்றும் எவ்வித அபிவிருத்தியுமின்றி வாழ்ந்து வருகின்றனா். 

 உங்களது பரம்பரைகள் பல வருடங்களாக தோட்டங்களிலும், முடுக்கு வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றீா்கள். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே ஆட்சியில் தான் இந்த மட்டக்குழி பிரதான பாதையை கூட காபட் இட்டு அபிவிருத்தி செய்துள்ளாா்.

 தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவா்கள் பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில் தான் கொழும்பினை பல அபிவிருத்திகளைச் செய்து அழகு படுத்தினாா் கொழும்பில் காணப்படுகின்றன நவீன தொடா்மாடி வீடுகளை அமைத்துள்ளாா். ஆகவே இம்முறையும் இப்பிரதேச வாழ் மக்கள் சிந்தித்து செயல் ஆற்றுங்கள். ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதியின் கீழ் உ்ளள அரசினையே மீண்டும் ஆட்சியமைக்க உதவுங்கள் இந்த அரசின் மூலமே உங்களது வாழ்க்கை தரமும் முன்னேறும். என தனசிரி அங்கு தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -