காரைதீவு சகா-
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் தலைமையிலான கல்விஅதிகாரிகள் குழுவொன்று கொரோனாத்தடுப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சம்மாந்துறை முஸ்லிம் மத்திய தேசிய பாடசாலைக்கு நேற்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டது.
கொரோனாவுக்கு பின்னரான பாடசாலைத்தரிசிப்புகள் மாகாண வலயமட்டக்குழவினரால் கிழக்கு மாகாணத்தில் பரவலாக இடம்பெற்றுவருகிறது.
அங்கு பாடசாலை அதிபர் முத்துஇஸ்மாயில் குழுவினரை வரவேற்று ஆரம்பிகக்ப்பட்டுள்ள வகுப்புகளை காண்பித்தார். பணிப்பாளர் நஜீம் ஒவ்வொருவகுப்பான இறங்கி ஆழஊடுருவி பல விடயங்களையும் ஆராய்ந்து பார்த்தார்.
குறிப்பாக ஆசிரியர்களின் கற்றல்கற்பித்தல் செயறபாடுகளை மிகவும் ஆழமாக ஆராய்ந்ததுடன் பல ஆலோசனைகளையும் வழங்கினார்.
பணிப்பாளருடன் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அமீர் உள்ளிட்ட கல்விஅதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டு தரிசிப்பை மேற்கொண்டனர்.
அண்மையில் கிழக்குமாகாண மட்ட கண்காணிப்புக்குழுவினர் இதேபாடசாலைக்கு விஜயம்செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.