சிறுபான்மை கட்சிகளின் ஒன்றினைவால் சமூக அபிலாசைகளை வெல்ல முடியும்முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் கோத்தாவின் வெற்றியின் பின் தான் தெரியவந்தது எங்களுக்குள் ஒரு புல்லுருவி கோடாரி காம்பு ரணில் விக்ரமசிங்க இருந்ததை இவர் தற்போது மஹிந்த கோத்தாவுடன் டீல் வைத்து ஆட்டம் போடுகிறார் சஜீத் பிரேமதாசவின் தோல்விக்கு இவரே காரணம் என முன்னால் பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

கிண்ணியா றகுமானிய பகுதியில் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தலைமையில் (23)இடம் பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் 1989 க்கு பிறகு நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போதும் 51 வீதமான வாக்குகளை பெற்றாலும் கூட பெரும்பான்மை ஆசனத்தை பெற முடியாது விகிதாசர முறை என்பது பொநுவாக ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா அம்மையார் 63 வீதமான வாக்குகளை பெற்று நாடாளுமன்ற தேர்தலில் கூட 101 ஆசனங்களை பெற்று பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.

கோத்தபாய ஜனாதிபதி தேர்தலில் 52 வீதமான வாக்குகளை பெற்று 3/2 பெரும்பான்மை பெற முடியாது ஆகக் குறைந்தது 80_ 90 வரையான ஆசனங்களையே பெற முடியும் இதனுடன் இணைந்து ரணில் விக்ரமசிங்க யானையை பூனையாக மாற்றி செயற்பட்டாலே எப்படியோ இவரால் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள முடியாது .

சொற்ப ஆசனங்களை கூட ரணிலால் பெற முடியாது .ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜீத் உடன் இற்றைக்கு சிறுபான்மை கட்சிகள் கைகோர்த்துள்ளன மலைய மக்கள் முண்ணனி,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஹெல உரிமய போன்றன கட்சிகள் இணைந்து அதிகூடிய ஆசனங்களை பெறலாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு 15 க்கும் குறையாத ஆசனங்களை பெறுகின்ற போது இது வாய்ப்பாக அமையலாம்

தேசிய கிரிக்கட் முன்னால் வீரர்களான மஹேல சங்கக் கார போன்றவர்கள் கூட சஜீத்துடன் இணைந்துள்ளார்கள் .

பிரேமதாசவின் ஆட்சி காலத்தில் பௌத்த இந்து முஸ்லிம் கலாசார அமைச்சு என்பன உருவாக்கம் பெற்றது இப்படியாக சஜீத் அவர்களுக்கும் பௌத்த மத குரு க்களுக்களிடையே பெரும் வரவேற்பு ஆதரவு உள்ளது.சிறுபான்மை கட்சிகளின் ஒன்றினைவால் நாட்டில் உள்ள அனைத்து இன மக்களுடைய அபிலாசைகளையும் வெல்லக் கூடிய ஒரு வாய்ப்பாகவும் சுபீட்சமிக்க நாடாக மாற்றவும் இந்த தேர்தல் எமக்கு கை கொடுக்கும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -