அண்மையில் காலமான மருதமுனையின் மூத்த கல்வியலாளர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் எம்.எச்.காதர் இப்றாகீம் அவர்கள்பற்றி நினைந்து பேசும் நிகழ்வு நாளை காலை(26-07-2020)9.00 மணிக்கு மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் சமுர்த்தி முகாமையாளர ஏ.ஆர்.எம்.சாலிஹ்; தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற அதிபர்களான ஏ.எல்.மீராமுகைதீன்,எம்.சி.அஹமது முகைதீன் ஆகியோர் நினைந்த பேசவுள்ளனர.; 'கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் இலங்கையில் சமூகப்பொருளாதாரத் தாக்கம்' தலைப்பில் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.ஏ.எம்.நுபைல் உரையாற்றவுள்ளார்.
நிகழ்வின் இணைப்பாளர்களாக கவிஞர்களான எம்.எம்.நௌபல்,எம்.எம்.விஜிலி ஆகியோர் செயற்படவுள்ளனர்.மண்டப ஒழுங்கமைப்பு எம்.ஏ.எம்.கைதர். அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற சுகாதார நடைமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்றுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.