முஸ்லிம்களை வேறுபக்கம் திசை திருப்பும் அரசியல் தலைமைகளுக்கு ஏமாந்து போகவேண்டாம். பாரிஸ் ஹாஜியாரையும் அமோக விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெறச்செய்வோம்.


கண்டியில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி
ஐ.ஏ. காதிர் கான்-

முஸ்லிம்களை வேறுபக்கம் திசை திருப்பும் அரசியல் தலைமைகளுக்கு ஏமாந்து போகாமல், அரசாங்கத்துக்கு வாக்களித்து பாரிஸ் ஹாஜியாரையும் அமோக விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெறச்செய்யுமாறு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத் தேசிய தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார நிகழ்வுகள் (19) ஞயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை தெல்தோட்டை, கண்டி, மடவளை பஸார், அக்குறணை, கல்ஹின்ன, கலகெதர, ஹதரலியத்த ஆகிய இடங்களில் இடம்பெற்றன. கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த கல்விமான்கள், வர்த்தகர்கள், மற்றும் புத்தி ஜீவிகள் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் மேலும் உரையாற்றுகையில்,
கண்டி வாழ் முஸ்லிம்கள் சமய, கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களையப் பாதுகாத்துக் கொள்வதற்கும் அவற்றைத் தொடர்ச்சியாகப் பேணிப் பாதுகாப்பதற்கும் பாரிஸ் ஹாஜியாருடைய பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். ஒவ்வொரு முஸ்லிம்களும் தங்களுடைய பிரதேசத்தில் ஆளும் தரப்பின் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு, சுகாதார நடை முறைகளைக் கடைப்பிடித்து சமூக இடைவெளிகளைப் பேணி வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, எமது ஜனாதிபதி சிறந்த முறையைக் கையாண்டு ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும். தற்போது ஓரிரு நாட்களில் தான் கொரோனா அதிகரித்துள்ளது என்ற செய்தியை நாங்கள் பார்த்தோம். ஆனால், அடுத்த நாடுகளான இந்தியாவில் மில்லியன் கணக்கில் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இரண்டு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எமது நாட்டில் சமூக மட்டத்தில் கொரோனா இல்லை. போதைப் பொருளுக்கு அடிமையானவர்களினால் தான் கொரோனாத் தொற்று பாதுகாப்புப் படையினருக்கு ஏற்பட்டது என்பதே உண்மை.

முதலாவது கொரோனாத் தொற்றுக்குள்ளான இருநூறு பேர் அடையாளம் காணும் போது, அதில் நூறு பேர் அளவில் எமது சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இதனால், அட்டுலுகம, பேருவளை, அக்குறணை, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், நாத்தாண்டிய, வாழைத்தோட்டம், மருதானை போன்ற முஸ்லிம் மக்கள் வாழும் பல பிரதேசங்கள் முடக்கப்பட்டன.

அந்த மக்களை சுய தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி எந்தக் குறைபாடுகளுமின்றி நன்கு கவனித்து, தமது வீடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். எமது நாட்டுக்குச் சிறந்த தலைவர் கிடைத்தமையால் தான், இந்தக் கொரோனாத் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலுமாக இருந்தது. எல்லா மக்களும் இந்நாட்டுப் பிரஜைகள் என்ற அடிப்படையில், சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக்கிணங்க ஒரு பொதுவான நியதியுடன் இச்சேவையை முன்னெடுத்தார்கள். முஸ்லிம்களுக்கு எந்தவொரு குறையுமில்லாமல் செய்து இருக்கிறார்கள்.
முஸ்லிம்கள் வேறு, சிங்களவர்கள் வேறு என அவர்கள் வித்தியாசம் பார்க்கவில்லை. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பிரிவினர்களுக்கும் எவ்வித வேறுபாடுகளுமின்றி சமநிலையில் கவனித்தார்கள். அரசாங்கம் பெரும்பான்மை, சிறுபான்மை என்று பாராமல், தனது கடமையைச் சரியாகச் செய்கின்றது. எனவே, முஸ்லிம்கள் இந்த அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக வாக்களிப்பதற்கான எந்தவிதமான நியாயங்களையும் சொல்வதற்கில்லை. முஸ்லிம்களும் இத்தேர்தலில் அரசாங்கத்திற்கு வாக்களித்து அவர்களுடைய பங்காளிகளாக நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -