குள்ளநரியான சுமந்திரன் கல்முனை பெண்களால் செருப்படி வாங்கி சென்றவர்.-கருணா (வீடியோ)


பாறுக் ஷிஹான்-
குள்ளநரியான சுமந்திரன் கல்முனை பெண்களால் செருப்படி வாங்கி சென்றவர் என என விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான் ) கூறியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பகுதியில் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணித் தலைவரும் அகில இலங்கை தமிழர் மகாசபை சார்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள தலைமை வேட்பாளராகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரனை வரவேற்று பெண்களால் நடாத்தப்பட்ட பிரசார கூட்டம் செவ்வாய்க்கிழமை(21) இரவு இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தெரிவித்ததாவது

ரணிலிடம் இலஞ்சம் வாங்கும் குள்ளநரியான சுமந்திரன் கல்முனை பெண்களால் செருப்படி வாங்கி சென்றவர் (19 நிமிடம்)இவர் திட்டமிட்ட முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைத்தவராவார்.இவர் அன்டன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் சமனில்லாதவர்.அன்டன் பாலசிங்கம் என்பவர் உலக ராஜதந்திரி.இனிவரும் காலங்களில் இவ்வாறானவர்களை நிராகரித்து வடகிழக்கில் மாற்றங்களை நாம் உருவாக்க வேண்டும்.தற்போது கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்டு செயற்பட போகின்றோம் என சம்பந்தர் கூறுகின்றார் .மக்களின் வாக்குகளை சூறை ஆடவே இவ்வாறு கூறி வருகின்றார்.அம்பாறை மாவட்டத்தை கல்வி வளர்ச்சியில் நாம் அக்கறை செலுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -