மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று (14) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு, காத்தான்குடியில் இருந்து திருகோணமலைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் வாகரைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்கேணி பிரதான வீதியால் செல்லும் போது நாய் ஒன்று குறுக்கறுத்ததில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் பலத்த காயங்களுடன் வீதியில் வீழ்ந்து கிடந்த போது பிரதேச மக்கள் 1990 அம்பியூலன்ஸ் சேவைக்கு அழைத்து அதன் மூலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.