மருதமுனையில் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன்
பி.எம்.எம்.ஏ.காதர்-
இந்த அரசாங்கம் இந்த நாட்டிலே வாழுகின்ற சிறுபான்மை மக்களின் தலைமைகளை அழித்து ஒழிப்பதற்கான சதிகளைச் செய்து கொண்டிருக்கிறது.இந்த அரசாங்கத்திலே சிறுபான்மைக் கட்சிகளையும் அதன் தலைமைகளையும் பலப்படுத்வேண்டிய தேவைப்பாடு சிறுபாண்மை சமூகங்களுக்கு இருக்கின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் மருதமுனையில் தெரிவித்தார்.
மருதமுனை வேட்பாளர் வை.கேறஹ்மான் தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மருதமுனை பிரதான வீதியில் ஞாயிற்க்கிழமை இரவு(19.07.2020) நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே றிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது:-சிறுபான்மைச் சமூகங்களுக்காக் குரல் கொடுத்தற்காகவும்,பேசியதற்காகவும்.சமூதாயத்திற்கு வர இருந்த ஆபத்துக்களை தடுபதற்கு முன்னுக்குச் சென்றதனால்தான் நியாயத்தைத் தட்டிக் கேட்டதனால்தான் இன்று இந்த அரசு எம்மை வீழ்த்தி வரப்போகின்ற பாரளுமன்றத்திலே எம்மை போன்றவர்கள் வந்து விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்ட சதிகளை இந்த மோசமான அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது.
இப்படி ஒரு மோசமான அரசு இந்த நாட்டிலே வந்ததில்லை இந்த நாட்டின் ஐக்கியத்தைப்பற்றி சுதந்திரத்திற்காகப் போராடிய இந்த தேசத்து வீரர்கள் முஸ்லிம்,தமிழ்,சிங்களத் தலைவர்கள் ஒன்று செர்ந்து பெற்ற சுதந்திரத்தை அனுபவிக்க விடாமல் மூன்று தசாப்தங்கள் தமிழ்சமுகங்கள் ஆயுமேந்திப் போராடி உங்களோடு வாழமுடியாது எங்களைப் பிரித்து விடுங்கள் என்று கூறிய வரலாறு இருக்கின்றது.
அந்தப் போராட்டத்திலே நசுக்கப்பட்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் வாழ்ந்திருக்கின்றது.சொத்துக்களையும், பல உயிர்களையும் இழந்து பெரும் பாதிப்புக்குள்ளாகி வாழ்ந்திருக்கின்றோம் எனவே இந்தத் தேர்தலிலே சிறுபான்மைச் சமூகங்கள் மிகவும் நிதானமாகச் சிந்தித்து செயற்படவேண்டி தருணம் இதுவாகும்.
கடந்த காலங்களில் எதிர் அணியினருக்கு வாக்களித்து மூன்று பாரளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதற்கு வழிவகுத்துக் கொடுத்தீர்கள் ஆனால் நீங்கள் எதையும் அனுபவிக்கவில்லை இம்முறை மருதமுனை மண்ணில் இருந்து ஒரு வேட்பாளரை நாங்கள் நிறுத்தியிருக்கின்றோம் இவரை வெற்றிபெறச் செய்வதற்கு எமது மயில் சின்னத்திற்கு வாக்களியுங்கள் எதிர்காலத்திலே இந்த மண்ணின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்வோம்.
இரண்டு தசாப்தங்களாக பாராளுமன்றத்திலே இருந்து கொண்டு மக்களின் தேவைகள் எதையும் செய்யாமல் கதிரைகளைச் சூடாக்கிவிட்டு வந்திருக்கிறார்கள் இவர்களுக்கு மீண்டும் வாக்களிப்பதா அல்லது மக்களுக்கு சேவையாற்றக் கூடியவர்களை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவதா இல்லையா என்பதை நீங்கதான்; தீர்மானிக்க வேண்டும்.
அம்பாறை மவட்டத்திலே மக்கள் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகள் கிடப்பிலே போடப்பட்டிருக்கின்றன இதற்குத் தீர்வுகாண வேண்டிய தேவை இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் தேர்தல் வந்தவுடன் மக்களிடம் வந்து பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை பெற்றுக் கொண்டு பாராளுமன்றம் செல்கின்றவர்கள் அடுத்த தேர்தல் வந்து விட்டால் மக்களைத் தேடிவருகின்றார்கள் இதுதான் இன்றைய நிலவரமாக இருக்கின்றது.
பிச்சைக்காரன் புண்ணைக் காட்டிக்காட்டி பிச்சை எடுப்பதைப்போல பொய்யான சில பிரச்சினைகளைச் சொல்லிச்சொல்லி வாக்குத் தேடுபவர்களாகவே அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட இந்தத் தேர்தலை மக்கள் பயன்படுத்த முன்வரவேண்டும் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.