தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கவே இணைந்தோம் செல்வா




நோட்டன் பிரிட்ஜ்  எம்.கிருஸ்ணா-

மிழ் முற்போக்கு கூட்டணியின் நான்காண்டு கால சேவையை உணர்ந்தும் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையிலே தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளிக்க தீர்மாணித்ததாக எஸ்.செல்வா தெரிவித்தார்

ஸ்ரீங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரக்கு ஆதரவளித்து பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த பிரதேச இணைப்பாளர்கள் உட்பட 300 பேர் வரையில்( 23 அட்டன் சாரதா மஹால் மண்டபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பர ம் முன்னிலையில் இணைந்துகொண்டனர்

மஸ்கெலியா செல்வாவின் தலைமையில் இணைந்துகொண்ட இளைஞர்கள் மத்தியில் ஊடகங்களுக்கு கருந்து தெரிவித்த செல்வா நாங்கள் ஆரம்பத்தில் முத்தையா பிரபாகரனுக்கு ஆதரவு தெரிவித்து பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டோம் ஆனால் நுவரெலிய மாவட்டத்தில் தமிழ் வேட்பாளர்ளை திட்டமிட்டு அதிகளவில் களம் இறக்கியுள்ளதால் தமிழ் பிரதநிதித்துவம் இல்லாது போகும் நிலை கணப்படுவதை உணர்ந்து நாங்கள் இந்த முடிவினை எடுத்தோம் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை பலப்படுத்தி வெற்றிபெற செய்வதன் மூலம் எதிர்காலத்தில் மலையகம் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -