மயோன் முஸ்தபாவின் அழைப்பில் சாய்ந்தமருது மண்ணுக்கு மஹிந்த ராஜபக்சவின் விஷேட விஜயம்!


சாய்ந்தமருது நகர சபை பிரகடனம், கல்முனை செயலக பிரிப்பு மற்றும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி அதிகாரம் தொடர்பான அரசின் நிலைப்பாடு தொடர்பில் மக்களுடன் மனம் திறந்து பேசி உண்மை நிலையை தெளிவுபடுத்த முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் அழைப்பின் பேரில் சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் திகாமடுல்ல வேட்பாளர் மயோன் முஸ்தபா ஜூனியர் ரிஸ்லி முஸ்தபாவை ஆதரித்து சாய்ந்தமருது பௌஸி மைதானத்தில் இடம்பெறும் மாபெரும் மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ள இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 23.07.2020 வியாழன் பிற்பகல் 3மணிக்கு வருகை தரவுள்ளார். இதன்போது திகாமடுல்ல மாவட்ட அரசியல் அதிகாரம் பொதுஜன பெரமுன அரசில் மயோனின் முக்கியத்துவம், நிறுத்திவைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி அறிவித்தலின் நிலை எதிர்வரும் தேர்தலில் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என பல்வேறு விடயங்களும் பற்றி பிரஸ்தாபிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -