புத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லவத்த பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
வயல் ஒன்றில் நெல் அறுவடை செய்துக் கொண்டிருந்த தாய் மற்றும் மகன் குறித்த பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக அருகில் இருந்த தேக்கு மரத்தடிக்கு சென்றுள்ளனர்.
இதன்போது, இளைஞனின் பையில் இருந்த கைப்பேசிக்கு மின்னல் தாக்கியுள்ள நிலையில் அவர் கீழே விழுந்துள்ளார்.
பின்னர் இளைஞன் வெல்லவாய ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்து காணப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
25 வயதுடைய திருமணமாகாத இளைஞன் ஒருவனே குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளான்.
சடலம் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.