கடந்த முறை கண்டியே போல இம்முறை இரத்தினபுரி இதுவே எங்கள் இலக்கு - திலகர்

நோட்டன் பிரிஜ்  எம்.கிருஸ்ணா-

மிழ் கடந்த பொது தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைத்தது. அதன்மூலம் நுவரெலியாவில் மூன்று ஆசனங்களை அதிக வாக்குகளுடன் உறுதிபடுத்தியதுடன் அதற்கு முன்னர் பதுளையில் இழக்கப்பட்ட இரண்டு பிரதநதத்துவத்தையும் கண்டியில் இழந்திருந்த ஒரு உறுப்பினரையும் சேர்த்து கொழும்பிலே ஒன்றுமாகும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி கொண்டது. கடந்த முறை கண்டியில் பெற்ற வரலாற்று வெற்றி போல இந்த முறை இரத்தினபுரியிலும் வெற்றிபெற்று மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதே இலக்கு என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேசிய பட்டியல் வேட்பாளர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் ஆசிரியர் எம்.சந்திரகுமாரின் விளக்கவுரை வழங்கும் ஊட்டச்சந்திப்பு இரத்தினபுரி பணிமனையில் இடம்பெற்றது. இந்த ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்

போதே திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷகளுக்கு ஏற்ற பிரிதிதித்துவத்தை உருவாக்கி அவர்களின் உரிமை மற்றும் அபிவருத்தியை உறுதிப்படுத்துவதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் இலக்காகும். அந்த இலக்கில் கடந்த 2015 - 2019 காலப்பகுதியில் கணிசமான வெற்றியை நாம் அடைந்து இருந்தோம். அதனை மேலும் விரிவுபடுத்தி முன்னோக்கி செல்லும் வகையில் எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டி உள்ளது. பதுளை மாவட்டத்தில் இழக்கப்பட்டருந்த இரண்டு உறுப்பினராக

களையும் கண்டியில் 20 வருடமாக இழந்த உறுப்புரிமையையும் கடந்த முறை மீட்க முடிந்தது. அதேபோல ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்திக்கான வாய்ப்பை கொண்டிருக்கும் இரத்தனபுரியில் இந்த முறை அதனை ஆசிரியர் சந்திரகுமார் ஊடாக உறுதி செய்வதே எமது இலக்கு.

அந்த இலக்கினை அடைவதற்கு இரத்தினபுரி மாவட்ட தமிழ் பேசும் மக்கள் அனைவரும் கரம் கோர்த்து செயற்பட வேண்டும். அதேநேரம் மலையகமெங்கும் வாழும் எமது உறவுகள் இரத்தினபுரி வாழ் தமது உறவினர்கள் நண்பர்களுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து ஆசிரியர் சந்திரகுமாரின் சின்னத்துக்கும் விருப்பு இலக்கத்துக்கும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும். இதனை சமூக கடமை என உணர்ந்து அனைவரும் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.


உங்கள் விளம்பரத்துக்கும் அழையுங்கள்
 077 61 444 61/ 075 0707 760

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -