திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தயாரித்த கைக்குண்டு ஒன்றினை வைத்திருந்த சந்தேக நபரை இம்மாதம் 23 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பி.சிவக்குமார் இன்று(20) உத்தரவிட்டார்.
சாந்திநகர்,சூரங்கால்,கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வெடி மருந்துகள் இட்டு தயாரித்து கைக்குண்டு ஒன்றினை வைத்திருந்த நிலையிலே கிண்ணியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.