அன்டன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் தான் சுமந்திரன் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் விடுதலை புலிகளின் போராட்டத்தை உலகறியச் செய்த ஒரு இராஜதந்திரி என அம்பாறை மாவட்டத்தில் தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி வேட்பாளர் தியாகராசா ஞானேந்திரனை ஆதரித்து கட்சி பணி மனை திறப்பு விழா இன்று(5) இடம்பெற்ற போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தனது கருத்தில் கூறியதாவது
ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கசிங்கத்திற்கு ஒப்பானவர் என தெரிவித்தார்.
அன்டன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் தான் சுமந்திரன். ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் விடுதலை புலிகளின் போராட்டத்தை உலகறியச் செய்த ஒரு இராஜதந்திரி ஆவார்.
வடக்கு கிழக்கு என்னவென்று தெரியாத சுமந்திரன் கொழும்பிலே வளர்ந்தவர் . 75 கள்ள வாக்குகள் போட்டவன் என்று தன் வாயாலே கூறிய ஒருவர்தான் சிறிதரன் அவருக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன. என்னையும் உரசி பார்க்கின்றனர் .
தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பவனி வருவதற்காகவா பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கின்றோம். வேட்பாளர் தெரிவு செய்யும் போது தமிழ் கட்சிகள் வர்த்தகர்களையும் , மதுபான சாலை உரிமையாளர்களை யும்,வட்டிக்கு பணம் கொடுப்பவர்களையும் வேட்பாளர்களாக்கி தெரிவு செய்தால் எவ்வாறு சேவை செய்வார்கள் . ஒப்பந்தம் செய்வது எப்படி என்றுதான் சிந்திப்பார்கள்.இதை விளங்கி கொள்ளாமல் தேசியம் தேசியம் என்று பேசிக்கொண்டு திரிகின்றனர் .
அம்பாறை மாவட்டத்தில் தான் தமிழ் கட்சியில் போட்டியிடுகின்றேன் . அம்பாறை தமிழர்கள் மொட்டு கட்சிக்கு வாக்களித்தால் முஸ்லிம் ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க ஏதுவாக அமையும் ஆதலால் தமிழ் மக்கள் மொட்டிற்கு வாக்களிப்பதற்கு பதில் எமக்கு வாக்குகளை வழங்குங்கள் என்றார்.
மேலும் இக்கூட்டத்தில் முன்னாள் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் , ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.