நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சுயேட்சைக்குழுக்களின் குழுத்தலைவர்கள் மற்றும் அபேட்சகர்களுக்கு தேர்தல் சட்டம் மற்றும் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் திங்கட்கிழமை (6)நடைபெற்றது.
ஓய்வுபெற்ற முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.எம்.மொஹமட் இதன்போது குறித்த தெளிவூட்டலை வழங்கியதுடன் தேர்தல் சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகள் தொடர்பான கேள்விகளுக்கும் பதில்களையும் தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் கிழக்கு மாகாண தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரனுடன் இணைந்து வழங்கினர்.
இந்நிகழ்வில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சுயேட்சை குழுக்களின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களும் ,பொலிஸாரும் கலந்து கொண்டனர்.