சேருநுவர பகுதியில் யானை தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழப்பு.



எப்.முபாரக்-

திருகோணமலை அல்லை கந்தளாய் பிரதான வீதியை அண்டிய பகுதியில் யானை தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிருக்கின்றனர்.
இச்சம்பவம் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று(23) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் கந்தககனாவ,அசலகல,மகியங்கனை பகுதியைச் சேர்ந்த கத்தரசிங்க ஆராச்சிலாகே அந்துன் டத்துர கத்தப்பான்கொட என்கின்ற 52 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யானை தாக்குதலுக்குள்ளான நபர் தொழில் ரீதியாக சேருவில பகுதியில் தங்கி நின்று மணல் அகழ்வு வேலைகளை மேற்கொண்டு வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக சேருவில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் தற்போது கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -