ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் டிக்கோயா தொழிற்சாலை பிரிவு தோட்டத்தில் பிரசுவித்த சிசுவை வீட்டு தோட்டத்தில் புதைத்த தாய் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு குறித்த சிசுவின் சடலத்;தினை ஹட்டன் நீதவானின் மேற்பார்வையின் கீழ் இன்று மாலை 3.00 மணியளவில் தோன்றி எடுக்கப்பட்டன.
குறித்த சிசுவின் சடலத்தினை வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருமணமான குறித்த பெண் 40 வயது மதிக்க தக்கவர் என்றும் இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் இவர் கொழும்பில் வேலை செய்து வருவதாகவும் ஜனவரி மாதம் 20ம் திகதி மீண்டும் தன் வீட்டுக்கு வந்துள்ளதாகவும் கொழும்பில் இருக்கும் போது ஏற்பட்ட ;,குறித்த தொடர்பு காரணமாக தான் கர்ப்பமடைந்தாகவும் கடந்த ஏழாம் திகதி கரு களைந்து இறந்து பிறந்ததனால் தான் கருவினை தோட்டத்தில் புதைத்ததாகவும் குறித்த பெண்ணிடம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
சம்பவம் ஹட்டன் ஐகரேகை அடையாளப்பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்து விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.