இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் அக்டோபர் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒக்டோபர் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள, இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான பாடத்திட்டங்களை முழுமையாக கற்பிப்பதற்கான போதுமான கால எல்லை இதன்மூலம் மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் அக்டோபர் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை குறித்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
கல்வி அமைச்சு செயலாளர் NHM சித்ரானந்த இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் மேலும் ஒரு மாதத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை அக்டோபர் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும், அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.