காரைதீவு சகா-
அம்பாறை மாவட்டத்தின் தமிழ்ப்பிரதேசங்களில் ஏகப்பட்ட பிரச்சினைகள் தேவைகள் பலவருடகாலமாக தீத்துவைக்கப்படாமலுள்ளன. அதனால் செல்லுமிடமெல்லாம் மக்கள் கொதிப்படைந்துகாணப்படுகின்றனர். எனவே அவற்றை எதிர்வரும் ஜந்துவருடகாலத்துள் படிப்படியாகத்தீர்த்துவைக்க உறுதிபூண்டுள்ளேன். ஆதரவைத்தாருங்கள்.
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரான பொறியிலாளர் கலாநிதி எஸ்.கணேஸ் வினாயகபுரத்தில் தனது தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.
இக்கூட்டம் நேற்றுமுன்தினம் த.தே.கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் சகிதம் வினாயகபுரம் மகளிரணித்தலைவி மேரிஅக்கா தலைமையில் நடைபெற்றது.அங்கு த.தே.கூட்டமைப்பு ஒரேயொரு பெண் வேட்பாளரும் காரைதீவு பிரதேசசபை உறுப்பினருமான திருமதி சின்னையா ஜெயராணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அங்கு வேட்பாளர் கணேஸ் உரையாற்றுகையில்:
வடக்கு கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களில் மிகவும் வித்தியாசமான தேவைகளுடன் பூகோளரீதியில மாறுபட்டு மூவினங்களும் இணைந்து வாழுவது அம்பாறை மாவட்டமாகும்.இங்கு 3ஆம் நிலையிலுள்ள தமிழ்மக்களுக்கான ஒரேயொரு பிரதிநிதித்துவத்தை தோற்கடிக்க வெளிமாவட்டத்திலிருந்து கருணா போன்று பலர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.
அவர் பிறந்த மட்டக்களப்பை விட்டு அம்பாறை வந்துள்ளார். அங்கு அபிவிருத்தி செய்துவி;ட்டாராம். உண்மையில் இலங்கையில் வறுமையில் முதலிடம் பெற்ற மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டமாகும்.முதலில் அவர் அங்கு கவனிக்கட்டும்.
முதலில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களுக்கான வலிமையான அரசியல்பலத்தை உருவாக்கவேண்டும். அதனூடாக கல்வி பொருளாதார சமுக அபிவிருத்தியை முன்னெடுக்கவேண்டும். அதற்கான பாரிய திட்டங்களை வகுத்துள்ளேன். செயற்படுத்தக்கூடிய விஞ்ஞாபனத்தை ஓரிருதினங்களில் வெளியிடுவேன்.
21ஆயிரத்து 820 தமிழ்வாக்குகளைக்கொண்ட கல்முனையில் இருந்துகொண்டு முழு மாவட்டத்தைiயும் அரவணைத்து ஒரே குடையின்கீழ் புத்திஜீவிகளினது வழிகாட்டலில் இளைஞர்களுடன் அரசியல் பயணத்தை முன்னெடுக்கத் தயாராகவுள்ளேன்.
1982க்குப்பிறகு அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் பலவழிகளிலும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அழிவுப்பாதையிலிருந்து மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். அதற்காக துறைசார்ந்த புத்திஜீவிகளை இணைத்து அவர்களின் வழிகாட்டலுடன் இளைஞர்களின் அரவணைப்போடு பயணிக்கவுள்ளேன்.. என்றார்.