ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னால் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஹரீஸ் மக்கள் காங்கிரஸில் இணைவு




ஹஸ்பர் ஏ ஹலீம்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுடைய மூதூர் முன்னால் பிரதேச சபை தவிசாளரும் அக்கட்சியின்
உயர்பீட உறுப்பினரும் தற்போதைய பிரதேச சபை உறுப்பினருமாகிய ஏ.எம்.ஹரீஸ் ஆசிரியர் அவர்களும் அவருடைய ஆதரவாளர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார் .

குறித்த நிகழ்வு நேற்று (21) மூதூர் பேர்ல் கிரேன்ட் ஹோட்டலில் இடம் பெற்றதோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லா மஃறூப் அவர்களின் முன்னிலையில் இணைந்து கொண்டார்.

இதில் முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், தம்பலகாம பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி உட்பட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் பங்கேற்றார்கள்.

--
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -