ஜே.எப்.காமிலா பேகம்-
நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் எச்சரிக்கை உள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த களத்தில் பணிபுரிந்துவரும் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று சுகயீன விடுமுறைப் போராட்டமொன்றை முன்னெடுக்க பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும் கொரோனா மற்றும் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் தொடர்பான கடமைகளிலிருந்து வெளியேறி நேற்றுடன் 08 நாட்கள் கடந்துள்ளதாக மஹேந்திர பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.