ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சம்மாந்துறை பிராந்திய தொகுதிக் காரியாலயம் திறப்பு(Photos)


ஐ.எல்.எம் நாஸிம்-   
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சம்மாந்துறை பிராந்திய தொகுதிக் காரியாலயம் அக்கட்சியில் போட்டியிடும் சம்மாந்துறை தொகுதி வேட்பாளர் அஸ்பர் உதுமாலெப்பை அவர்களினால் நேற்று (7) திறந்துவைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் உரையாற்றிய வேட்பாளர் அஸ்பர் உதுமாலெப்பை

சம்மாந்துறை பிரதேசத்தில பல இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்பில்லாமல் தொடர்ந்தும் பெரும் அவஸ்த்தைக்கு உள்ளாகி வருகின்றனர். இப்போதுள்ள படித்த பிள்ளைகள் 35 வயதாகியும் இதுவரையில் திருமணம் செய்யாமல் தங்களுடைய எதிர்காலம் குறித்து அச்சப்பட்டவர்களாக காணப்படுகின்றார்கள். அதற்கு காரணம் நிரந்தர தொழில் முயற்சிக்கான சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமையும், விலைவாசி அதிகரிப்புமாகும்.
எனவே வாழ்க்கை செலவை எவ்வாறு சமாளிப்பது என்ற கவலை இனிமேலும் எமது இளைஞர்கள் மத்தியில் இருக்கக்கூடாது. கடந்த காலங்களில் எமது பிரதிநிதிகளாக இருந்தவர்கள் தங்களுடைய வாழ்வாதார முன்னேற்றத்திற்காகவே உழைத்துள்ளார்கள். வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய மக்களின் நலன்சார்ந்த எந்த முன்னெடுப்புகளும் இல்லாமல் மீண்டும் மக்கள் முன்வந்து போலியான வாக்குறுதிகளையும், ஆசைவார்த்தைகளையும் கூறுகின்றார்கள். எனவே இவர்களால் நிச்சயமாக எமது மக்களுக்கான தேவைகள் என்னவென்று இனம்கண்டு பூர்த்தி செய்ய முடியாது. அவ்வாறு ஏதாவது இருந்திருப்பின் அது கடந்தகாலங்களில் சாத்தியமாகியிருக்க வேண்டும். ஆகவேதான் மக்கள் ஆகிய நாங்கள் உணர்ச்சி ஊட்டும் அரசியல் கலாச்சாரத்தில் இருந்து வெளியேறி அறிவுபூர்வமான அரசியல் பாதையொன்றை தெரிவு செய்ய முன்வரவேண்டும். அதுவே அரோக்கியமாக எதிர்காலத்தை உருவாக்கும். அதற்காக தற்கால இளைஞர்கள் முன்னின்று செயலாற்ற வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கான எமது பயணத்தில் வெற்றிகாண முடியும்.
மேலும், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியே தொடர்ந்து இருக்கப்போகிறது. அமையப்போகும் பாராளுமன்றத்தில் கூட எமது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பாலான ஆசனங்களுடன் ஆட்சியமைக்க போகிறது. எனவே எதிர்வரும் தேர்தலில் சம்மாந்துறை மக்களின் காத்திரமான தீர்மானம் என்னை வெற்றிபெற செய்வதினூடாக எமது பிராந்தியத்தின் தேவைகளை, அபிலாசைகளை, தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருவதற்கான இலகுவான வழியை எமக்கு ஏற்படுத்திதரும் எனவே மாமுல் அரசியல் தரகர்களை புறந்தள்ளி எதிர் வரும் காலங்களில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அதுமாத்திரமல்ல எமது பிரதேச சபை உறுப்பினர்கள் எல்லோருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அழைப்புவிடுக்கின்றேன். கடந்த காலங்களிலும் அழைப்பு விடுத்திருக்கின்றேன்,இந்த நேரத்திலும் அழைப்பு விடுக்கின்றேன்.
கடந்த காலங்களில் நீங்கள் பிரதேச சபை உறுப்பினர்களாக இருக்கும் போது உங்களது வட்டாரத்தில் உங்களுக்கு தெரியாமலே உங்கள் அரசியல் தலைமைத்துவங்கள் கொந்தராத்து அரசியலை செய்தனர். அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை உங்களது வட்டாரத்துக்குரிய அதிகாரங்களை உங்களுக்கே வழங்குவேன். அபிவிருத்திகள் அனைத்தும் அந்தந்த வட்டார உறுப்பினர்கள் ஊடாகவே வழங்கப்படும். அதனை கட்சி பேதங்களுக்கு அப்பால் நான் செய்துதர காத்திருக்கிறேன். அதற்காக எனது கரங்களை பலப்படுத்த முன்வருமாறு மீண்டும் இச்சந்தர்ப்பத்தில் நான் அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
இந்நிகழ்வில் திகாமடுல்லயில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -