நற்பிட்டிமுனை TEAM 97 அமைப்பினால் இரத்ததான நிகழ்வு


பாறுக் ஷிஹான்-
ல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் நிலவும் இரத்தப் பற்றாக் குறையை நிவர்த்திக்கும் முகமாக நற்பிட்டிமுனை Team 97 அமைப்பினால் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று நற்பிட்டிமுனை அல் அக்ஸா ஆரம்ப பாடசாலையில் இன்று காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.

அண்மைக்காலமாக நாட்டில் ஏற்பட்டிருந்த கொரோனா அனர்த்தத்தின் பின்னர் இரத்த வங்கிகளில் இரத்த தட்டுப்பாடு நிலவி வருகின்றது.இதற்கமைய இவ்விரத்ததான முகாமில் பெண்களும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்ததை காண முடிந்ததுடன் அவர்களுக்கு பிரத்தியேக ஏற்பாடுகளை குறித்த அமைப்பினர் மேற்கொண்டிருந்தனர்.

உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம் எனும் தொனிப் பொருளில் குறித்த அமைப்பு வருடா வருடமாக இந்த இரத்ததான முகாமினை நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.அம்பாரை மாவட்டத்தில் இவ்வமைப்பு முன்னெடுத்த குறித்த இரத்த தான முகாமில் அமைப்பின் அங்கத்தவர்கள் உள்ளடங்களாக சுமார் 100க்கும் அதிகமானவர்கள் பங்குபற்றி இரத்ததானம் வழங்கினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -