புனிதம் நிறைந்த இந்த மாதத்தில் உறவுகளை சீர்செய்வோம். பகைமை மறப்போம். அடுத்தவர்களை மன்னிப்போம். பிழையான சிந்தனைகளை, கருத்துக்களை முன்வைத்த சகோதரர்களையும் விரிந்த உள்ளத்தோடு விட்டுக் கொடுத்து அன்பாக பழகுவோம்.
மலர்ந்துள்ள புத்தாண்டின் முதல் மாதம் பகை மறப்பு மாதம் என்ற உணர்வை முதலில் உள்ளத்தில் உயிர் வாழவைப்போம். பின்னர் நடத்தையில் கொண்டுவருவோம்.
எமது குழந்தைகளுக்கு இது அமைதியை சுமந்து வரும் புத்தாண்டு என்பதை அழியாத வடுக்களாக நினைவில் கொள்ள வழிவகுப்போம்.
முஹர்ரம் ஒரு கொள்கையின் வெற்றிச் சின்னம். சாந்தி சமாதானம் அமைதி அன்பு அதன் பெறுமானங்கள்.
இனி துன்பமில்லை துயரமில்லை என்று நம்புவோம். அந்த கொள்கை வாழ எம் வாழ்வை அர்ப்பணிப்போம். சமூகம் நிம்மதியாக வாழ எமது நிம்மதியை நாம் இழப்போம். அப்போது அமைதி என்றும் நிலைக்கும்.
யாஅல்லாஹ்! இந்த சிறப்பான நாளில் முஸ்லிம் உம்மத்துக்கு நன்மையையே நாடுவாயாக!
எமது சமூகத்தின் தொடர் துயரங்களுக்கு முற்றுப் புள்ளியாக இந்த நாளை ஆக்குவாயாக!
ஆமீன்!
ஏ.எல்.எம்.சலீம்
சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர்.
0 comments :
Post a Comment