19 ஆயிரம் பேரை வேலை நீக்கம் செய்ய அமெரிக்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனம் முடிவு!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-


கொரோனா வைரஸ் பரவலால் விமானப் போக்குவரத்து உலகெங்கிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 19 ஆயிரம் பேரை வேலையிலிருந்து நீக்க அமெரிக்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் 30% வேலைகளை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்னர் 140,000 ஊழியர்களைக் கொண்டிருந்த அமெரிக்க ஏயார்லைன்ஸின் விமான நிறுவனத்தின் பங்குகள் 2.7% சரிந்தன.

கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த விமான நிறுவனங்களுக்கு $25 Billion ( சுமார் 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ) நிதியுதவியை அமெரிக்க அரசு கடந்த March மாதம் அறிவித்தபோதும், மேலும் $25 Billion ( சுமார் 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ) வழங்கவேண்டுமென விமான நிறுவனங்கள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் விமான நிறுவனங்களின் பங்கு சரிவடைந்ததால் நிலைமை மேலும் மோசமானது. இதனால் தற்போதைய நிலையில் 50 சதவீதத்திற்கும் குறைவான அளவே விமானப் பயணங்களை திட்டமிட அமெரிக்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே பணியாளர்களை வேலைநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.

திட்டமிடப்பட்ட வேலை இழப்புகள் 17,500 தொழிற்சங்கத் தொழிலாளர்களைக் கொண்டிருக்கின்றன - இதில் 1,600 விமானிகள் மற்றும் 8,100 விமான உதவியாளர்கள் - மற்றும் 1,500 நிர்வாக பதவிகள் உள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :