20ஆவது திருத்தம் சிறுபான்மை இனங்களுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும்- எம்.எஸ்.தௌபீக்


எப்.முபாரக் -

ரசாங்கம் தற்போது 19ஆவது சீர்திருத்தத்திற்குப் பதிலாக 20 வது சீர்திருத்தத்தை அமல்படுத்த உள்ளது இது மக்களுக்கு பேராபத்தை உருவாக்கும் , ஆகவே சிறுபான்மை இனங்களுக்கு ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

கிண்ணியாவில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாவட்டக் காரியாலயத்தில் (22) இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே லேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:-

இந்த சீர் திருத்தத்தில் எதை எடுத்து இதனை வழங்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை எது எவ்வாறாக இருந்தாலும் 19 வது சீர் திருத்ததில் காணப்படுகின்ற நன்மையான விடயங்களை இவர்கள் மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே எமது விருப்பமாகும் எனவும் அவர் தெரிவித்தார்
இந்ய 19இல் ஆணைக் குழுக்கள் அமைத்து நாட்டில் ஜனநாயகம் ஏற்படுத்த பட்டிருக்கின்றன

திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி கலந்துரையாடலின்போது எதிர்வரும் காலத்தில் அமைப்புகளை உருவாக்கி இம்மாவட்டத்தின் அபிவிருத்திகளை மக்களுடன் ஒன்று சேர்ந்து பங்களிப்பு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார் .

பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காக தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அது EPF வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் என காரணங்கள் காட்டப்பட்டு உள்ளதாகவும்,

இவ்வாறு ஈபிஎப் பெற்றவர்கள் சிலர்
அவர்கள் தங்களது தொழில் இன்மையை போக்குவதற்காக செய்ததாகவும் அதனால் அவர்களுக்கு ஈபிஎப் பதியப்பட்டுள்ள ஆகும் இதனால் இவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

தொழில் இல்லாத தங்களது பிள்ளைகளை நடத்துவதற்காக இவர்கள் தொழிலை மேற் கொண்டதாகவும் அதற்காக ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சிலர் வெளிநாடுகளிலும் சிலர் உள்நாட்டில் இருந்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் முடித்து உள்ளதாகவும் அவர் முடித்தவர்களின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அங்கீகரிக்கப்பட்ட போதும் நிராகரிக்கப்பட்டது .

இதன் காரணமாக பலர் தங்களது தொழிலை இழந்துள்ள நிலை காணப்படுவதாகவும் இவ்வாறு தங்களது பெயர்கள் நிராகரிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் என்றால் இவர்கள் பல சிரமத்தின் மத்தியிலேயே பட்டங்களை முடித்துள்ளார்கள் இவர்களுக்கான ஒரு நடவடிக்கையை அரசாங்கம் மிக விரைவில் எடுக்க வேண்டும் அவர்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :