ஆசிரியை திருமதி கலாவதி சிவராஜா 33வருடகால ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு.!


காரைதீவு நிருபர் சகா-

முப்பதுமூன்று வருட கல்விச்சேவையிலிருந்து நிந்தவூர் அல்அஷ்ரக் தேசியக்கல்லூரியின் தமிழ்ப்பட்டதாரி ஆசிரியை திருமதி கலாபதி சிவராஜா நேற்று தனது 60வது வயதில் ஓய்வுபெற்றார்.

நிந்தவூர் அல் அஷ்ரக் ம. ம. வி. தேசிய பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியைகளில் ஒருவரான திருமதி. கலாபதி சிவராஜா அவர்கள் இன்றுடன் தனது ஆசிரிய பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

இவர் 1987. டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் தனது ஆசிரிய பணியை முதன் முதலில் ஆரம்பித்து சுமார் 30 வருடங்கள் அக் கல்லூரியிலும் அதை தொடர்ந்து 2017.அக்டோபர் 24 ஆம் திகதி தொடக்கம் 2020.ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையிலும் 33 வருட சேவையைப் பூர்த்தி செய்தவராவர்.
இவர் கல்முனை கார்மல் பற்றிமா கல்லூரியை முன் கொண்டு வர பல அர்ப்பணிப்புகளை செய்தவராவர். இவர் அக் காலப் பகுதியில் காமல் பற்றிமா கல்லூரியின் உதவி அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.

2017.ஒக்டோபேர் 24 ஆம் திகதி அல் அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு வருடாந்த இடமாடம் மூலம் வருகை தந்த இன்று 2020.08.21 ஆம் திகதி தனது ஆசிரிய பணியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் ஓய்வு பெற்று செல்வதற்கான பாராட்டு வைபவம் பாடசாலையின் உயர்தர பிரிவின் தலைவர் எம்.எ.அச்சிமொகமட் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உயர்தர பிரிவு ஆசிரிய ஆசிரியைகள் அணைவரும் கலந்து சிறப்பித்தனர்.








Attachments area

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :