நாட்டில் 4471ஆசிரிய ஆலோசகர்களை புதிய ஆசிரியஆலோசனை சேவைக்குள் உள்ளீர்க்க கல்வியமைச்சு விண்ணப்பம் கோரல்!



காரைதீவு சகா-
நாட்டில் சேவையிலுள்ள 4471ஆசிரிய ஆலோசகர்களை புதிய ஆசிரிய ஆலோசனை சேவைக்குள் உள்ளீர்க்க 21/2020ஆம் இலக்க கல்வியமைச்சு சுற்றுநிருபம் மூலம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

கல்வியமைச்சன் புதிய செயலாளர் பேராசிரியர் கே. கபில சிகே. பெரேரா இச்சுற்றுநிருபத்தை மாகாணகல்வியமைச்சின் செயலாளர்கள் பணிப்பாளர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிவைத்துள்ளார்.
'இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை' எனப்பெயரிடப்பட்டு கடந்த 01.07.2020 விசேடவர்த்தமானியின்மூலம் இச்சேவைக்கான பிரமாணக்குறிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் கல்வியமைச்சின் சுற்றுநிருபப்படி 'ஆசிரிய ஆலோசனை சேவை' எனப் பெயரிடப்பட்டு விண்ணப்பங்களை கோரியுள்ளது.
அதன்படி சம்பந்தப்பட்ட ஆசிரியர்ஆலோசகர்கள் தங்கள் விண்ணப்பங்களை வலயக்கல்விப்பணிப்பாளருடாக எதிர்வரும் 31.12.2020க்கு முன்னதாக அனுப்பிவைக்கவேண்டுமென செயலாளர் கேட்டுள்ளார்.

இலங்கைக்கல்வித்துறை வரலாற்றில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த 'இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை' எனும் புதியசேவை உதயமாகியுள்ளது.

1970காலப்பகுதியில் முதன்மை ஆசிரியர்கள் என அழைக்கப்பட்டுவந்த இத்தொகுதியினர் 1980களில் ஆசிரியஆலோசகர்கள் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டனர்.

தற்போது சுமார் 50ஆண்டுகளின்பின்னர் இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை என்ற புதிய சேவை உருவாக்கப்பட்டு அதற்கென தனியான சம்பளத்திட்டமடங்கிய பிரமாணக்குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. உண்மையில் ஆசிரிய ஆலோசகர்களுக்கு இது தித்திப்பானதொரு செய்தியாகும். சமகால அரசாங்கம் வழங்கிய வெகுமதி என்றும் கூறலாம்.

இதற்காக அவர்கள் பலத்த போராட்டங்களையும் அவமானங்களையும் தாண்டிவந்துள்ளனர் என்பது இங்கு பதிவிடப்படவேண்டியவை.

நாட்டிலுள்ள 99 வலயங்களில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கான முன்னோடிவகுப்புகள் நடாத்துதல் கல்விஅபிவிருத்தி மற்றும் பாடஅபிவிருத்தி எனபவற்றில் இவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தேசிய கல்விக் கொள்கைகளுக்கு ஏற்ற வகையில் நிரல் மற்றும் மாகாண கல்வி அமைச்சுகளின் நிர்வாகத்தின் கீழ் கல்வி வலயத்தில்ஃ கோட்டத்தில் உரிய விடயம் தொடர்பான விசேட நிபுணர்களாக செயலாற்றி பாடத்திட்டங்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் தொடர்பில் ஆசிரியர்களை திசைமுகப்படுத்தல், வலயத்தில்ஃகோட்டத்தில் ஆசிரிய பயிற்சிக்கான தேவைகளை இனங்கண்டு ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்கு தேவையான செயற்பாடுகளை அமுல்படுத்தல், தேசிய ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு செயற்பாடுகளின்; போது செயலூக்கத்துடன் பங்களிப்புச் செய்தல் மற்றும் வலயத்தில்ஃ கோட்டத்தில் தனது பாடத்திற்குரிய கல்வித் தரங்களை மேம்படுத்துவதற்கு ஒத்துழைத்தல.; என்பது இவர்களின் தொழிலாகும்.


22.08.2019இல் அரசாங்கசேவை ஆணைக்குழுவினால் இப்புதியசேவை அங்கீகரிக்கப்பட்டு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் இச்சேவைக்கான பிரமாணக்குறிப்பு வர்த்தமானிப்பிரகடனம் செய்யப்படாமல்இழுபட்டுவந்தது.

அது தற்போது யுலை1ஆம் திகதிய அதிவிசேடவர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவைக்காக 4471 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இவர்களில் 3188பேர் சிங்களமொழிமூலமும் 1283பேர் தமிழ்மொழி மூலமும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். நாடளாவியரீதியில் தெரிவாகவுள்ள 1283 தமிழ்மொழி ஆசிரியஆலோசகர்களுள் வடமாகாணத்தில் 377பேரும் கிழக்குமாகாணத்தில் 370பேரும் தெரிவாவர்.இந்த 4471 பேரில் பெரும்பான்மையாக 1358பேர் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர்களாகத் தெரிவாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :