திருகோணமலை மாவட்டதில் 73 சதவீத வாக்குப் பதிவு


எம்.ஏ.முகமட்-
திருகோணமலை மாவாட்டத்தில் 73.5 சதவீதம் வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான ஜே.எஸ்.டி.எம்.அஸங்க அபேவர்தன தெரிவித்தார்.
நேற்று மாலை 5.30 மணியளவில் திருகோணமலை விபுலானந்த கலூரியில் இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் 307 வாக்களிப்பு நிலையங்களில் காலை 8 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்புகள் மாலை 5 மணிவரை எவ்வித பாரிய அசம்பாவிதங்கள் எதுவுமின்றி சுகாதார முறை பேணப்பட்டு வாக்களிப்பு இடம்பெற்றதாக தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு பதிவின் பிரகாரம் மூதூர் தொகுதியில் 110891 வாக்குககளும்,சேருவில தொகுதியில் 80912 வாக்குகளும், திருகோணமலைத் தொகுதியில் 97065 உள்ளடங்களாக திருகோணமலை மாவட்டத்தின் மொத்த வாக்குககள் 288,868 ஆகும்.
நேறைய தினம் 307 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றன.
4 பாராளூமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 13 அரசியற் கட்சிகளிலும் 14 சுயேட்சைக்குழுக்களிலும் மொத்தமாக 189 பேர் போட்டியிடுகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :