டெங்கு, ஸிகா, சிக்கன்குன்யா கட்டுப்படுத்த 75 கோடி மரபணு மாற்றப்பட்ட நுளம்புகள் அமெரிக்காவில் அறிமுகம்!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

விவசாயத்தில் அதிக விளைச்சலைக் கொடுக்கக் கூடிய தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையை மேற்கொள்வார்கள். அதாவது, எந்தெந்த விலங்குகள் இணை சேர்ந்தால் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்பதைக் கவனித்து இணை சேர்ப்பர். அதன்படி, அதிக உற்பத்தியை தரக்கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், அவற்றின் மூலம் பெரும்பான்மையாகப் பாதிப்புகளே ஏற்படுகின்றன என்பதால், பல நாடுகளில் அவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந்த மரபணு மாற்ற அறிவியல், பக்க விளைவுகளை அதிகமாகக் கொண்டதென்று ஒரு சாரர் இதைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இப்போது இந்த மரபணு மாற்றத்தைக் நுளம்புகளில் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் வந்துவிட்டால், டெங்கு, ஸிகா, சிக்கன்குன்யா போன்ற நோய்களும் நுளம்புக் கடியின் வழியாகவே ஏற்படுகின்றன. அதை சரிக்கட்ட அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மரபணு மாற்றப்பட்ட நுளம்புகளை உற்பத்தி செய்யவுள்ளனர்.

கடந்த May மாதம், அமெரிக்க அரசாங்கம் UKயை தலைமையிடமாகக் கொண்டு, அமெரிக்காவில் செயல்படுகின்ற ஒக்சிடெக் ( Oxitec ) என்ற நிறுவனத்துக்கு மரபணு மாற்றம் செய்த நுளம்புகளை உருவாக்க அனுமதி வழங்கியது. ஏடெஸ் எகிப்தி ( Aedes aegypti ) என்ற வகையைச் சேர்ந்த கொசுக்கள், மனிதர்கள் மத்தியில் டெங்கு, ஸிகா, சிக்கன்குன்யா போன்றவற்றைக் கொண்டுவருகின்றன. அந்த இனத்தின் ஆண் நுளம்புகளிடமே இந்த மரபணு மாற்ற பரிசோதனையை அவர்கள் மேற்கொண்டனர்.

‘OX5034’ என்று இந்த ஆண் நுளம்புக்கு பெயரிடப்பட்டுள்ளது. மரபணு மாற்றப்பட்ட ஆண் இனத்தோடு பெண் நுளம்புகளிடையே இனப்பெருக்கச் செயல்முறை நிகழ்ந்தால், அதன் மூலம் பிறக்கின்றவை, முட்டையிலிருந்து வெளியாகிப் புழு வடிவத்தில் இருக்கையிலேயே இறந்துவிடும் என்றும் கூறுகின்றனர். அதன்மூலம், நுளம்புகள் பரப்புகின்ற நோய்கள் பரவாமல் தடுக்க முடியுமென்று ஒக்சிடெக் நிறுவனம் கூறுகின்றது.

மரபணு நுளம்புகளை புளோரிடா கீஸ் ( florida keys ) என்ற ஒரு சிறிய தீவில் முதலில் திறந்துவிடப் போவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதற்கு அமெரிக்க மத்திய மற்றும் மாகாண அரசாங்களின் அனுமதிகளும் கிடைத்துவிட்டன. மரபணு நுளம்பு திட்டம் வெற்றியடைந்தால், இனிமேல் மக்கள் நுளம்பு தொல்லையின்றி நிம்மதியாக இருக்க வாய்ப்புள்ளது. புளோரிடா மாநிலத்தில் 75 கோடி மரபணுமாற்றம் செய்யப்பட்ட நுளம்புகளை பறக்கவிட முடிவு செய்துள்ளனர். இந்த நுளம்புகள் டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் நுளம்புகளின் இனப்பெருக்கத்தை தடுத்து, அவற்றை முழுமையாக ஒழிக்கும் என அமெரிக்க அரசாங்கம் நம்புகிறது. அத்துடன் இந்த விபரீத திட்டத்திற்கு அனுமதியும் அளித்துள்ளது. ஆனால் புளோரிடா மாகாண மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :